ரயில் டிக்கெட் கிடைக்குமா? கிடைக்காதா? விரைவில் காத்திருப்பு பட்டியலைக் கணிக்கும் செயலி!

1,490

 544 total views

ரயிலை விட விமானத்தில் வேகமாகச் செல்லலாம் என்றாலும் ரயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் எண்ணிக்கை அதிகம். விமானம் கூடக் காலியாகச் செல்லும் ஆனால் பல ரயில்கள் காலியாகச் செல்வதைக் காணவே முடியாது.

இப்படிப்பட்ட ரயில் டிக்கெட் புக் செய்யும் போது டிக்கெட் கிடைக்காமல் காத்திருப்பவர்களின் பட்டியலும் நீளும். குறிப்பாக விழாக்காலங்களில் ரயில் டிக்கெட் கிடைப்பதே அபூர்வம் தான். இனி இப்படி ரயில் டிக்கெட் புக் செய்துவிட்டு டிக்கெட் கிடைக்குமா, கிடைக்காதா என PNR நிலையைச் சரிபார்த்துக்கொண்டு காத்திருப்புப் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை இருக்காது.

நீங்கள் புக் செய்த ரயில் டிக்கெட் காத்திருப்புப் பட்டியலில் இருந்தால் இந்திய ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ள புதிய செயலியின் மூலம் சீட்டு கிடைக்குமா, கிடைக்காதா என்று கணிக்க முடியும். இதனைப் பொருத்து நீங்கள் வேறு ரயில் அல்லது பேருந்து டிக்கெட் புக் செய்து பயணம் செய்துகொள்ளலாம்.

ரயில்வே நிர்வாகத்தின் கணிப்பு என்பது கடந்த 13 வருட டிக்கெட் புக்கிங் தரவை வைத்து எடுக்கப்பட்ட முடிவுகளை வைத்து அளிக்கப்பட உள்ளது. ஒரு நாளைக்கு 13 லட்சம் நபர்கள் ரயில் டிக்கெட் புக் செய்கின்றார்கள்.

You might also like

Comments are closed.