எங்கள் மின்சார கார் தொழில்நுட்பத்தை காப்பியடியுங்கள்! – இலான் மஸ்க்

569

 1,206 total views

மிகச் சிலரே தங்களின் கண்டுபிடிப்புகள் இலாபத்துடன் மக்கள் மனதையும் கவர வேண்டும் என விரும்புவர்.
tesla

Tesla Motors உலகின் மிகவும் வெற்றிகரமான மின்சார கார் தயாரிப்பு நிறுவனம். இவர்களின் மாடல் எஸ்  எனும் வகை கார் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கார்.

Tesla Motors Model S தான் உலகிலேயே சிறப்பான மின்கல மறுமின்னேற்றம் (Power Recharging) செய்யும் தொழில்நுட்பம் கொண்டது.
உலகில் உள்ள கோடிக்கணக்கான கார்கள் பெட்ரோலிய பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றன.  மின் கார் தயாரிக்கும் தனது போட்டியாளர்களை ஊக்குவித்து உலகில் அதிகமான மின்சார கார்கள் ஓட வேண்டும் என்ற எண்ணத்தில், தங்கள் நிறுவனம் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுவைத்த மின்கல மறுமின்னேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தின் ரகசியங்களை வெளியிட்டார்.

எங்கள் தொழில்நுட்பத்தால் உலகில் நன்மை நடப்பதால் எங்களுக்கு மகிழ்ச்சி. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் எந்த நிறுவனத்தையும் நாங்கள் வழக்கு தொடர்ந்து தொந்தரவு செய்யமாட்டோம் என்றும் சொல்லியுள்ளார்.

tesla-ceo-elon-musk-628

தங்களின் பிற கண்டுபிடிப்புகளையும், இனி புதிதாக ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளதாக இவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இலான் மஸ்க்
, பல இளம் தொழில்முனைவோருக்கு முன் மாதிரி நபர்.

நீங்கள் Bat Man, Iron Man திரைபடங்கள் பார்த்திருந்தால், அந்த இரு கதாநாயகர்களின் வாழும் வடிவம் தான் இவர்.  இவரிடம் அளப்பரிய தொழில்நுட்பங்கள் உள்ளன.

வணிக ரீதியாக அனைவரையும்  விண்வெளி  பயணம் அழைத்துச் செல்லும் நிறுவனம்.
ஏவியவுடன் மீண்டும் பூமிக்கே சேதாரம் இல்லாமல் வரும் ராக்கெட்.
குழாய் போன்ற பாதைகளைக் கொண்ட போக்குவரத்து முறை.
மின்சாரத்தில் இயங்கும் கார்.

என படங்களில் மட்டுமே உள்ள பலவற்றையும் இன்றே உருவாக்கிக் காட்டுபவர் Elon Musk.

You might also like

Comments are closed.