ஸ்கைப் 6.0 வெர்சன் மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளத்திற்கான புதிய வெர்சனை ஸ்கைப் அறிமுகம் செய்திருக்கிறது

538

 1,405 total views

skype-windows-download

ஸ்கைப் ஒரு புதிய அப்டேட்டட் டெஸ்க்டாப் ப்ரோக்ராம் வெர்சனை விண்டோஸ் மற்றும் மேக்கிற்காக அறிமுகம் செய்திருக்கிறது. ஸ்கைப் 6.0 என்று அழைக்கப்படும் இந்த புதிய வெர்சனை இனி மைக்ரோசாப் மற்றும் பேஸ்புக் மூலமும் சைன் இன் செய்யலாம். அதனால் இனி பழைய மாதிரி ஸ்கைப்பில் சைன் இன் செய்யத் தேவை இராது.

இந்த புதிய ஸ்கைப் அப்டேட் மைக்ரோசாப்ட் தயாரிப்புகளோடு இன்டக்ரேட் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் ஹாட் மெயில், அவுட்லுக் மற்றும் விண்டோஸ் லைவ் மெசன்ஜர் போன்றவற்றிலிருந்து இன்ஸ்டன்ட் மெசேஜ் பெற உதவி செய்கிறது. மேலும் இந்த புதிய அப்டேட் ஸ்கைப்பில் விடப்படும் வீடியோ மற்றும் ஆடியோ கால்களின் தரத்தை உயர்த்தி இருக்கிறது.

அதோடு இந்த புதிய ஸ்கைப் 6.0  வெர்சன் 6 புதிய மொழிகளை சப்போர்ட் செய்கிறது. குறிப்பாக தாய், குரோஷியன், ஸ்லோவேனியன், செர்பியன், காட்டலான், மற்றஉம் ஸ்லோவாக் போன்ற புதிய மொழிகளை சப்பரோட் செய்கிறது. இதன் மூலம் ஸ்கைப் 6.0 மொத்தம் 38 மொழிகளை சப்போர்ட் செய்கிறது.

மேலும் இந்த புதிய வெர்சனில் எஸ்எம்எஸ் மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் பகுதி அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய அப்டேட் விண்டோஸ் 8 வெளிவந்த பிறகு வந்திருக்கிறது. கடந்த வருடன் 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் ஸ்கைப்பை விலைக்கு வாங்கியது.

You might also like

Comments are closed.