2010ன் சிறந்த மனிதர் முகநூல்(Facebook) நிறுவனர் “மார்க் ஜுகர்பேர்க்”

714

 1,336 total views

அமெரிக்காவின் TIME நாளிதழ் ஒவ்வொரு வருடமும் உலகின் சிறந்த மனிதரை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தி செய்தி வெளியிடும். ரூஸ்வால்ட், சர்ச்சில், ஒபமா, ஹிட்லர், ஸ்டாலின் என உலகின் பெரும் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட இந்த கவுரவம். முகநூல் தளத்தினை நிறுவிய திரு. மார்க் ஜுகர்பெர்க் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த உயரிய கவுரவம் பில்ல்கேட்ஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களுக்குக் கூட இதுவரை கிடைக்கவில்லை. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், மிகக் குறைந்த வயதில்(23) இந்தப் பெருமையைப் பெரும் இரண்டாவது மனிதர் மார்க்.

இந்த 2010இன் போட்டியில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்ககப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவன தலைவர் ஜூலியன் அஸ்ஸங்கே “மக்களின் விருப்ப சிறந்த மனிதர் 2010” என கவுரவம் அடைந்தார். திரு. ஜூலியன் பல நாடுகளின் அரசாங்க ஊழல்கள் மற்றும் ராணுவ மீறல்களை வெளியிட்டு பல பிரச்சனைகளை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர். இவருக்கு வந்த ஆதரவு மார்க்கிற்கு வந்ததை விட மிக மிக அதிகம். ஆனால் TIME நாளிதழ் மார்க் தான் சிறந்த மனிதர் அவரின் இந்த சமூக தளத்தின் மூலம் அவர் பல நன்மைகளை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

மார்க் மற்றும் ஜூலியன் அவர்களுக்கு TECHதமிழ் மற்றும் தமிழர்கள் சார்பாக வாழ்த்துகள்.

You might also like
2 Comments
  1. Joseph Ranjan says

    சிறந்த சாதனை … தொழில் நுட்ப செய்தியை மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கும் இந்த தளம்
    மிகப்பெரிய வெற்றி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை .

Comments are closed.