Google தேடியந்திரதினால் மனித மூளை பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல்
1,257 total views
கணினி உபயோகிப்பாளர்கள் பலர் Google-ஐ தான் உபயோகம் செய்கின்றனர். Google நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் Google தேடியந்திரதினால் மனித மூளையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இணையத்தில் ஏதோ ஒரு தகவலை Google-ல் பார்த்து படித்து தகவலை அறிந்து கொள்கிறார்கள். அதே தகவல் மீண்டும் தேவைப்பட்டாலும் திரும்பவும் Google சென்று தான் தேடுகிறார்களே தவிர மாறாக முன்பு பார்த்ததை ஞாபகம் வைத்து கொள்வதோ, அது என்ன தகவல் என யோசித்துப் பார்ப்பதோ இல்லை. Google-ல் கொடுத்தால் நொடிப்பொழுதில் தகவலை அறிந்து கொள்ளலாம் அதற்கு ஏன் யோசித்து நேரத்தை வீனடிக்கணும் என்ற மன நிலையினால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.
Comments are closed.