உங்கள் மொபைல் டேட்டாக்களை ஆன்லைனில் பேக்கப் செய்திட- ஜி க்ளவுடு அப்ளிக்கேஷன்

886

 2,972 total views

ஆன்லைனில் தகவல்களை ஸ்டோர் செய்து வைத்து கொள்ளும் வசதியினை ஜி க்ளவுடு சேவையில் பெறலாம். ஆனால் இதற்கென்று பிரத்தியேகமாக கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய அப்ளிக்கேஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜி க்ளவுடு என்ற இந்த அப்ளிக்கேஷனை கூகுள் ஸ்டோரில் இருந்து எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அப்ளிக்கேஷனை இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.  நாம் வைத்திருக்கும் மொபைல்களில் நிறைய தகவல்களை ஸ்டோர் செய்து வைத்திருப்போம். இந்நிலையில் மொபைலை தொலைத்துவிட்டால் கூட இன்னொன்று வாங்கிவிடலாம். ஆனால் இதில் இருக்கும் ஏராளமான தகவல்ளை மீண்டும் சேர்க்க முடியாது. இந்த தகவல்களை ஜி க்ளவுடு அப்ளிக்கேஷன் பயன்படுத்தி ஸ்டோர் செய்து வைத்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் கான்டேக்டு, கால் லாக்ஸ், ஃபோட்டோஸ், டாக்கியூமெண்ட்ஸ் போன்ற தகவல்களை இந்த ஜி க்ளவுடு அப்ளிக்கேஷனில் பதிவு செய்து கொள்ளலாம்.

 

 

வைபை, 3ஜி என்று எந்த இன்டர்நெட் சேவை பயன்படுத்தினாலும் இந்த அப்ளிக்கேஷன் சிறப்பாக செயல்படும். இதற்கு இன்னும் ஒரு உதாரணமும் கூறலாம். இன்டர்நெட்டில் புதிதாக ஒரு தகவலையோ அல்லது ஒருவரின் (கான்டேக்ட் அட்டிரஸ்) முகவரியையோ ஜி க்ளவுடு அப்ளிக்கேஷனில் பதிவு செய்கிறோம் என்று வைத்து கொள்ளவோம். அப்ளிக்கேஷனில் சேர்த்த இந்த தகவல் ஆட்டோமெட்டிக்காக மொபைலில் ஸ்டோர் செய்யப்படுகிறது.

  • மொபைல் டூ மொபைல் ட்ரேன்ஸ்ஃபர் டேட்டா
  • பேக்கப் மெசேஜ்
  • கான்டேக்டு
  • புகைப்படங்கள்
  • வீடியோக்கள்
  • மியூசிக்

ஆகிய தகவல்களை எளிதாக மொபைலில் ஸ்டோர் செய்யலாம்.

 

VPS-REDSERVERS-CHEAP-VPS-HOSTING

You might also like

Comments are closed.