பங்குச் சந்தைக்குள் நுழைந்தது Facebook
567 total views
கடந்த வெள்ளிக்கிழமை தன்னை ஒரு பொது நிறுவனமாக NASDAQ எனும் அமெரிக்க பங்கு சந்தையில் தன்னை பட்டியலில் சேர்த்துக் கொண்டது. நீங்கள் இந்த நிறுவனம் பற்றிய வணிகச் செய்திகளை படிப்பவர் என்றால் , உங்களுக்கு நன்றாகத் தெரியும் இந்த நிறுவனத்தில் எந்தனை ஆயிரம் கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று.
100 பில்லியன் டாலர் மதிப்புள்ள facebook சந்தையில் 18 பில்லியன் டாலர் அளவில் தனது சந்தை மதிப்பை எட்டியுள்ளது. அளவிற்கு அதிகமான மக்கள் இதன் பங்குகளை வாங்கி வருகின்றனர். இதன் விலை தடுமாற்றத்துடன் இருப்பது போன்ற ஒரு மாயையை பல பெரும் முதலீடு நிறுவனங்கள் ஏற்படுத்தி அதிக பங்குகளை வாங்குகின்றன.
என்னடா இது, நாம் தினமும் மொக்கை போடும் தளம் கோடிகளில் விளையாடுகிறதா என யோசிக்கிறீர்களா? நம்மை போன்றவர்களால் தான் இன்று இந்த நிறுவனம் சம்பாதிக்கிறது தெரியுமா?
கடந்த 2011 ஆண்டில் மட்டும் ஒவ்வொரு அமெரிக்க பயனாளர் மூலம் facebook பெற்ற வருமானம் $6.5 . ஆம் அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் (Personal Information, Age, gender, interests, occupation, location) போன்றவற்றின் மூலம் விளம்பரதரர் தரும் பணம் தான் இதன் வருமானம்.
மேலும் ஒரு செய்தி., பங்கு சந்தையில் இணைந்த அடுத்த நாள் , திரு மார்க் அவர்கள் தமது 9 வருட பள்ளித் தோழியை திருமணம் செய்தார். இவரின் மனைவி சமீபத்தில் தான் மருத்துவப் படிப்பை முடித்தார்.
Comments are closed.