BSNL தளத்தை தாக்கிய Hackers
1,305 total views
தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66A நீக்கப்பட வேண்டும் என அஸீம் திரிவேதி மற்றும் தெக்ஸித் ஆகியோர் கடந்த 6 நாட்களாக உண்ணா விரதம் இருந்து வருகின்றனர். இந்த சட்டப் பிரிவானது கருத்து சுதந்தரத்திற்கு எதிராகவும், அரசாங்கம் இதை முறையின்றி பிரயோகம் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளன.
இந்த உண்ணாவிரததத்திற்கு ஆதரவு தரும் விதத்தில் சில இணைய மேதைகள் (Anonymous Hackers) BSNL இணைய தளத்தை www.Bsnl.co.in தாக்கியுள்ளனர். எவராலும் BSNL தளத்தை காண இயலாது. அதுமட்டுமில்லாமல் பல பயணர் கணக்கு கடவுச் சொற்களையும் திருடி வெளியிட்டுள்ளனர்.
இந்த தாக்குதல் பார்ப்பதற்கு DDOS வகை தாக்குதல் போல் உள்ளது. ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை எளிதாக தாக்க தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக் கணக்கான Server மற்றும் தனிக் கனினிகளில் இருந்து அந்தக் குறிப்பிட்ட தளம் உள்ள Serverக்கு தொடர்ந்து பல HTTP கோரிக்கைகளை (Requests) இடைவெளி இல்லாது கொடுப்பர். ஒரு வினாடியில் தொடர்ந்து பற்பல கோரிக்கைகள் வருவதால் Web Server எவருக்கும் பதிலளிக்க இயலாமல் தொங்கி விடும்.
உண்மையான பயணர் கொடுக்கும் Page Load HTTP Request Blog ம் தாக்குபவரின் Page load HTTP Requestம் ஒரே மாதிரி இருப்பதால் அவர்களை கண்டறிந்து தடுப்பது சிரமம். (ஆனால் முடியும்).
IT Act 66 A நீக்கப் பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருதும் இல்லை. ஆனால் BSNL தளத்தை தாக்குவது என்பது செத்த பாம்பை அடிப்பது போன்றதாகும். இதனால் பொதுமக்களுக்கு தான் வீண் சிரமம். இதனால் அரசுக்கு எந்த கவன ஈர்ப்பும் ஏற்படாது.
Comments are closed.