இணைய தளங்கள், வீடியோக்கள், புகை படங்கள் ஆகியவற்றை க்ளவுட் (cloud) சர்வர்களில் ஹோஸ்ட் செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் எனும் பெயரில் செய்து வருகிறது. மிகவும் விலை குறைவான செர்வர்களை அமேசானில் வாங்கலாம். அமேசானின் இந்த சேவையின் பலம் அதன் டேட்டா சென்டர்கள் பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும். ஆனால் இந்தியாவிற்கு அருகில் உள்ள டேட்டாசெண்டர் சிங்கப்பூரில் மட்டுமே இருந்தது.
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும். இந்தியாவில் இருந்து அமேசான் வெப் சர்வீசஸ் செர்வர்களை பணம் கட்டி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 75000 வரை தொட்டதாலும் அமேசான் இந்திய இணைய பயனாளர்கள் மட்டும் இணைய தள சேவை / வடிவமைப்பு மென்பொருள் நிறுவங்களை திருப்தி படுத்தும் வகையில் மும்பையில் மட்டும் இரண்டு டேட்டா சென்டர்களை திறந்துள்ளது. இங்கே ஆயிரக்கணக்கான செர்வர்கள் இருக்கும்.
இதே போல Cloud ஹோஸ்டிங்க்ளில் குறைந்த காலத்தில் பிரபலமான டிஜிட்டல் ஓசன் நிறுவனம், இந்தியாவில் அதிகமாக சேர்வார்கள் வாங்குகிறார்கள் என்பதை உணர்ந்து பெங்களூரில் தனது டேட்டா சென்டரை ஆரம்பித்துள்ளது.
இதே போல சாப்ட் லேயர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் இணைந்து இந்திய மென்பொருள் நிறுவனங்களை திருப்தி படுத்த சென்னையில் டேட்டா சென்டரை திறந்துள்ள.

தொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.
You might also like
Comments are closed.