விற்பனையில் இமாலய சாதனை படைக்குமா UBISLATE?

611

 1,325 total views

  • Data Wind நிறுவனம் தனது UBISLATE மற்றும் Aakash 7  Tablet-களின் பெயர்களை மாற்றி இருக்கிறது. அதாவது Aakash Tablet UBISLATE  எனவும் UBISLATE -7 மற்றும் UBISLATE 7+ எனவும் பெயர் மாற்றம் பெற்றிருக்கின்றன. இந்த தகவல் Data Wind-ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வந்திருக்கிறது. இந்த 2 Tablet-களுமே மாணவர்களுக்காகவே தயாரிக்கப்பட்டவை ஆகும்.
  • இந்த UBSILATE 7+ Tablet வாங்குவதற்கான விண்ணப்பம் கடந்த மாதம் தொடங்கியது. விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதத்திற்க்குள்ளாகவே இந்த Tablet கிடைத்துவிடும். மேலும் மார்ச் வரை விண்ணப்பிக்கலாம். இந்த UBISLATE 7+ Tablet  Android Gingerbread இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த Tablet Cortex A8 – 700 MHz Processor, HD வீடியோ கோ ப்ராசஸரையும் கொண்டுள்ளது.
  • இந்த UBISLATE 7+ Tablet-ன் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 7.5 x 4.7 x 0.6 inch அளவுள்ள தொடு திரையைக் கொண்டுள்ளது. இதன் WEBCAM 0.3 Mega Pixel HT வசதியுடன் built-in மைக்கையும் கொண்டுள்ளது.
  • சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த டேப்லெட் ப்ளாஷ் ஈ-ப்ரோம் கொண்டுள்ளது. இது 2 ஜிபி RAM கொண்டிருக்கிறது. மேலும் இதன் சேமிப்பு வசதியை விரிவுபடுத்த microSD மற்றும் ட்ரான்ஸ்ப்ளாஷ் கார்டுகளையும் இந்த Tablet கொண்டிருக்கிறது. அதோடு WiFi மற்றும் HDMI போர்ட்டும் உண்டு. ஆனால் Bluetooth வசதி இந்த Tablet-ல் கிடையாது. மேலும் USB 2.0வைக் கொண்டுள்ளது.
  • பொதுவான அம்சங்களாகப் பார்த்தால் இந்த Tablet மின்திறனிற்காக 3200 MHz battery கொண்டுள்ளது. இந்த battery  5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த Tablet-ன் மொத்த பரப்பு 190.5 x 118.5 x 15.7 மிமீ ஆகும். அதோடு இதன் மொத்த எடை 350 கிராம் மட்டுமே. இந்த UBISLATE Tablet LINUX இயங்கு தளத்தில் இயங்குகிறது.
  • இதன் சந்தை விலை சுமார் 2999/- மட்டுமே. இந்த UBISLATE 7+ Tablet  போல குறைந்த விலையில் எந்த ஒரு Tablet-ம் இதுவரை வரவில்லை. அதனால் இதன் விற்பனை மிக அபாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதை உலகின் மிகக் குறைந்த விலை Tablet என்றும் அழைக்கலாம்.

You might also like

Comments are closed.