யாஹூ மற்றும் பின்ங் நிறுவனங்கள் இணைகிறது

539

 722 total views

yahoo and bing vs google

யாஹூ  (Yahoo Search) மற்றும் பின்ங் (Bing Search) தேடுபொறி   நிறுவனங்கள் இணைந்து செயற்படப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன.  கூகிள் சில மாதங்களுக்கு முன்புதான், தனது தேடலுக்கான புதிய Caffeine Algorithm என்ற புதிய தேடல் உக்தியியை அறிமுகப்படுத்தியது.

இது தற்போதைக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் மாத்திரமே செயற்படும் பின்னர் மற்ற நாடுகளில் நிறுவப்படும்.

சந்தையில் 65% பங்கினைக்  கூகிள் நிறுவனம்  கொண்டுள்ளது. யாஹூ,பின்ங் தேடுபொறிகள் முறையே 2ம் 3ம் இடத்தில் உள்ளது.   யாஹூ தேடுபொறியில்  கிடைக்கும்  முடிவினை பின்ங் தேடுபொறி வழங்கப்போவதாக யாஹூ அறிவித்துள்ளது.

யாஹூ மற்றும் பிங் தேடு பொறிகள் இணைவது கூகல் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏற்கனவே பயர்பாக்ஸ் குழுமத் தலைவர் ASA கூகள் நிறுவனத்தின் மக்களின் தனிப்பட்ட ப்ரைவேட் தகவல்களை கையாலும் விதம் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என்பதால், மக்கள் பிங் தேடு பொறியைப் பயன்படுத்துவது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.

yahoo-bing-usa-canada established

கூகிள் தேடுபொறியினை(Google Search Engine) வெற்றி கொள்ளவே இந்த இரு நிறுவனங்களும் கை கோர்த்திருப்பது தெளிவாக தெரிகிறது.

You might also like

Comments are closed.