பாதுகாப்பாக கைபேசியை பயன்படுத்துவதற்கு வழிமுறைகள்
1,928 total views
இன்று நாம் கைபேசி இல்லாமல் இருப்பதில்லை என்று சொல்லும் அளவுக்கு கைபேசி நம் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. இதனால் காது கேட்கும் திறன் பாதிக்கும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
காது பாதிக்காத அளவிற்கு கைபேசியில் பேசுவதற்கு வழிமுறைகள்
1. தவிர்க்க முடியாத நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மிகக் குறைந்த கால அளவு மட்டும் கைபேசியில் பேசுங்கள்.
2. தரமான நிறுவனங்கள் தயாரிக்கும் குறைந்த மின்காந்த கதிர்வீச்சு கொண்ட கைபேசிகளை மட்டும் வாங்கி பயன்படுத்துங்கள்.
3. நேரடியாக கைபேசியில் பேசும் பழக்கத்தை தவிர்த்து speaker mode, hearing phone மற்றும் headset உபயோகித்து உரையாடுவது நல்லது.
4. குழந்தைகளும், கர்ப்பிணிகளும் கைபேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
5. பழுதடைந்த, சரிவர இயங்காத அலைபேசிகளை உபயோகிக்கக் கூடாது.
6. செல்போனுக்கு பதில் தொலைபேசியை உபயோகிக்கலாம் மற்றும் மின்னஞ்சல் தொடர்பும் சிறந்தது.
7. கைபேசி மிகக்குறைந்த battery-யில் வலுவிழந்து நிற்கும் போது பேச வேண்டாம். முழுமையாக charge செய்து விட்டு பேசுங்கள்.
Comments are closed.