தற்பொழுது கூகுள் +ல் Barack Obama

560

 1,043 total views

சமீப காலமாக பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க சமூக இணையதளங்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். ட்விட்டர் தளத்தில் உலகில் உள்ள பெரும்பாலான பிரபலங்கள் அனைவரும் கணக்கு வைத்து அவர்களின் கருத்துக்களை எளிதில் அனைவருக்கும் தெரியப்படுத்துகின்றனர். அந்த வகையில் கூகுளின் புதிய சமூக இணையதளமான கூகுள் பிளசில் அமெரிக்காவின் அதிபர் ஒபாமா இணைந்துள்ளார்.

 

Barack Obama தற்பொழுது ஒரு பக்கத்தை உருவாக்கி தகவல் பகிர்ந்துள்ளார். அவரை உங்கள் வட்டத்திற்குள் சேர்த்துக் கொண்டால் அவர் பகிரும் தகவல் உடனே உங்களை வந்து சேரும். இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் ஒபாமா கூகுள் பிளசில் பகிர்ந்த முதல் தகவல் இதுவரை 180 நபர்களால் மட்டுமே Share செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து விடுவார் என்ற நம்பிக்கையிலும், ஜார்ஜ் புஷ் மீது இருந்த வெறுப்பின் காரணத்தினாலும் இவரை நம்பி அதிபர் அரியணையில் அமர வைத்த மக்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் மற்றும் பல புதிய பிரச்சினைகளை கொண்டு வந்துவிட்டார் என இவர் மீது ஏற்ப்பட்டிருக்கும் வெறுப்பின் காரணமாகவே யாரும் அதிகமாக Share செய்யவில்லை என்ற பேச்சு ஒரு புறம் கிளம்பி உள்ளது.

 

You might also like

Comments are closed.