டெல் நிறுவனத்தின் புதிய விண்டோஸ்-8 இயங்குதள சாதனங்கள்

763

 1,714 total views

எலக்ட்ரானிக் சாதன உலகில் புதிய 3 டேப்லட்களை அறிமுகம் செய்கிறது டெல் நிறுவனம். லேட்டிடியூடு-10, லேட்டிடியூடு-6430-யூ மற்றும் ஆப்டிப்ளக்ஸ்-9010 ஆல் இன் ஒன் என்ற பெயரில் இந்த மின்னணு சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது.

பொதுவாக மின்னணு சாதனங்கள் அனைத்து இடத்திலும் அறிமுகம் செய்ய கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் இந்த டெல் டேப்லட்கள் இத்தனை சீக்கிரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது இன்னும் சந்தோஷமான ஒரு விஷயம் என்று கூறலாம்.

லேட்டிடியூடு-10 டேப்லட் 10 இஞ்ச் திரையில் தகவல்களை கொடுக்கும் வல்லமை கொண்டது. இந்த டேப்லட்டில் 1366 X 768 திரை துல்லியம், இதன் 10 இஞ்ச் திரையில் பெறலாம். திரையின் மூலம் தெளிவான தகவல்களை வழங்கும் இந்த டேப்லட்டில் 8 மெகா பிக்ஸல் கேமராவை சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் புகைப்படங்கள், வீடியோ ரெக்கார்டிங் என்று பல முக்கிய வசதிகளையும் பெற முடியும். இந்த லேட்டிடியூடு-10 டேப்லட் ரூ. 42,490 விலை கொண்டதாக இருக்கும்.

லேட்டிடியூடு வரிசையில் 6430-யூ அல்ட்ராபுக் டேப்லட் 33 சதவிகிதம் மெல்லிய தோற்றம் கொண்டதாக இருக்கும். இதில் அம்சமாக 14 இஞ்ச் திரையினை பயன்படுத்தலாம். 3 செல் பேட்டரியினை வழங்கும் இந்த டேப்லட் ஐ3, ஐ7 கோர் பிராசஸரை வழங்கும்.

இதில் 8 ஜிபி ரேம் வசதியினையும் பெற முடியும். இந்த டேப்லட்டில் இன்டெல் எச்டி-4000 கிராஃபிக்ஸ் தொழில் நுட்ப வசதியினையும் சிறப்பாக பயன்படுத்த முடியும். இந்த டேப்லட் ரூ. 69,990 விலை கொண்டதாக இருக்கும்.

23 இஞ்ச் ஆல் இன் ஒன் டெஸ்க்டாப் ஆப்டிபிக்ஸ்-9010 என்ற பெயரில் அறிமுகமாகிறது. இதில் நவம்பர் 10ம் தேதியில் இருந்து ஸ்டோர்களில் விற்பனை செய்யப்படும். இந்த எலக்ட்ரானிக் சாதனத்தை ரூ. 49,990 விலையில் பெறலாம்.

டெல் எக்ஸ்பிஎஸ்-12-எஸ்-2340-டி டேப்லட் 12.5 இஞ்ச் லெட் பேக்லைட் தொடுதிரை வசதியினை வழங்கும். சிறந்த திரையினை வழங்குவதோடு இதில் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வசதியினையும் பெறலாம். 6 செல் லித்தியம் அயான் பேட்டரியினையும் இந்த எலக்ட்ரானிக் சாதனத்தில் பயன்படுத்த முடியும். இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை சிறப்பாக பெறலாம்.

எக்ஸ்பிஎஸ்-12 டேப்லட் கியூஎஸ்-77 எக்ஸ்பிரஸ் சிப்செட், 6 செல் லித்தியம் அயான் பேட்டரியும் இந்த டேப்லட்டில் பெறலாம். இதில் 1.3 மெகா பிக்ஸல் வெப்கேமராவை சுலபமாக பயன்படுத்தலாம். இதன் விலை ரூ. 90,490 விலை கொண்டதாக இருக்கும்.

23 இஞ்ச் திரை கொண்ட எஸ்-2340-டி மல்டி மானிட்டரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் விண்டோஸ்-8 இயங்குதளத்தினையும், 1920 X 1080 திரை துல்லியத்தினையும் சிறப்பாக பயன்படுத்தி கொள்ளலாம். டெல் நிறுவனம் அறிமுகம் செய்கிற இந்த எலக்ட்ரானிக் சாதனங்களின் விலை சற்று அதிகமானதாக இருப்பினும், இதில் நவீன வசதிகளை பெறலாம் என்று கருதப்படுகிறது.

You might also like

Comments are closed.