செல்போன் அழைப்பை தடுக்க புதிய கருவி
1,804 total views
காரை ஓட்டிச் செல்லும் போது வரும் செல்போன் அழைப்புகளை தடுக்க புதிய கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்போன் வசதி மூலம் தகவல் பரிமாற்றத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. அதே வேளையில் கார் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டிச் செல்லுகையில் செல்போனை பயன்படுத்துவதால் கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுகின்றன.
செல்போனால் ஏற்படும் விபத்துகள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செல்போனால் ஏற்படும் வாகன விபத்துகளை குறைப்பதற்காக, ஸ்கோச் என்ற தொழில்நுட்ப நிறுவனம் ‘செல் கன்ட்ரோல்’ என்ற நவீன கருவியை அறிமுகம் செய்துள்ளது.
கையில் எடுத்துச் செல்லும் அளவிற்கு சிறிய கருவியான இதை காரில் பொருத்தினால் பயணத்தின் போது செல்போனுக்கு அழைப்பு வந்தால் புளுடூத் சிக்னல் மூலம் அழைப்பு தடுக்கப்படும். மேலும் SMS, E-Mail போன்ற சேவைகளை முற்றிலும் இக்கருவி தடுத்து விடும்.
குறிப்பாக வாடகைக் கார்களில் டிரைவர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடுக்க இந்த கருவி உதவும். கருவியை டிரைவர் ஏதாவது வகையில் செயலிழக்கச் செய்தால் அது பற்றி Travels அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டறைக்கு தகவல் வந்து விடும்.
இந்த செல்போன் கன்ட்ரோல் கருவியின் விலை சுமார் 6,500 ரூபாய். ஆரம்பத்தில் 1,200 கருவிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதால் இதற்கு கடும் போட்டி நிலவியது.
Comments are closed.