கூகுள் பிளஸோடு இணைகிறது Picnik இணைய தளம்

648

 1,233 total views

Google நிறுவனம் பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பட்டியலில் பல பிரபல தளங்களும் சில பிரபலமாகாத தளங்களும் உள்ளன. Google நிறுவனம் அதிரடி நடவடிக்கையாக சமீபத்தில் Google பஸ் சேவையை மூடியது. தனது புதிய சமூக வலைத்தளமான கூகுள் பிளசை பிரபலப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அந்த வரிசையில் online-ல் போட்டோக்களை edit செய்ய உதவும் பயனுள்ள தளமான picnik தளம் மூடப்பட்டு இந்த தளம் கூகுள் பிளசோடு இணைகிறது. வரும் ஏப்ரல் மாதம் இந்த தளத்தின் சேவை மூடப்பட இருக்கிறது. ஆக ஏப்ரல் மாதத்தில் இருந்து கூகுள் பிளசிலேயே போட்டோக்களை edit செய்து கொள்ளலாம்.

இந்த தளம் மூலம் கூகுள் பிளசில் வர இருக்கும் சில வசதிகள்:

  • வெட்டுதல்(Crop), அளவை குறைத்தல்(Resize), திருப்புதல்(Rotate) போன்றவைகளை செய்து கொள்ளலாம்.
  • போட்டோக்களுக்கு அழகான effects சேர்த்தல்
  • போட்டோக்களில் சேர்க்க விதவிதமான Frames
இப்படி மேலும் பல பயனுள்ள வசதிகளை கூகுள் பிளசிலேயே வாசகர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்த நடவடிக்கையால் picnik தளத்தின் premium கணக்கில் உள்ள வசதிகளை இனி இலவசமாகவே உபயோகித்து கொள்ளலாம்.

You might also like

Comments are closed.