கூகுளில் கல்வி செய்திகளை தேடுவதில் இந்தியர்கள் முன்னிலை!

563

 1,393 total views

கூகுளில் நிறைய செய்திகளை மக்கள் தேடி வருகின்றனர். அந்த வகையில் கூகுளில் கல்வி சம்பந்தமான செய்திகளைத் தேடுவதில் உலகில் முன்னனியில் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக சமீபத்தில் வெளி வந்திருக்கும் ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கூகுளில் கல்வி சார்ந்த செய்திகளைத் தேடுவதில் அமெரிக்கா முதலிடத்திலும், அதற்கடுத்து இந்தியா இரண்டாவது இடத்திலும் இருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதோடு இண்டர்நெட் வைத்திருக்கும் மாணவர்களில் 60 சதவீதத்தினர் தங்களது கல்வி சம்பந்தமாக கூகுளில் நிறைய செய்திகளை தேடுவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக இந்த தேடப்படும் செய்திகளில் முன்னனியில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் கலை சார்ந்த செய்திகளும் இருக்கின்றன அந்த ஆய்வு கூறுகிறது. மேலும் தாங்கள் எந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பதில் இந்திய மாணவர்கள் 6 மாதத்திற்கு முன்பிருந்தை கூகுளில் தேடி வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு டிஎன்எஸ் ஆஸ்திரேலியாவால் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் 2,229 பேர் கலந்து கொண்டனர். இதில் 52 சதவீதம் பேர் ஆண்களும், 48 சதவீதம் பேர் பெண்களும் அடங்குவர். இதில் கலந்து கொண்ட அத்தனை பேரும் 18 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் இந்த ஆய்வு புது டில்லி, மும்பை, புனே, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற மாநகரங்களில் நடத்தப்பட்டது.

மேலும் தங்களது கல்வி நிறுவனங்களில் மொபைல் பிரண்ட்லி வெப்சைட்டுகள் இருக்க வேண்டும் என்று பல இந்திய மாணவர்கள் விரும்புவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. எப்படியோ நல்ல செய்திகளை விரும்பிப் படிப்பதில் இந்தியர்கள் முன்னிலையில் இருக்கிறார்கள் என்று கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

You might also like

Comments are closed.