ஒரே வாரத்தில் உங்கள் ப்ளாக் அலெக்சா ராங்க் முன்னேற 5 வழிகள்

579

 1,062 total views

அலெக்சா என்பது அமேசன்.காம் என்ற பிரபல வலையுலக அங்காடித் தளத்தின் ஒரு கிளை தளம். இது உலகில் உள்ள எல்லா வலை தளங்களுக்கும் ராங்கிக் தருகிறது. அலெக்சா டூல்பார் என்ற ஒன்றை பல ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களில் நிறுவி அதன் மூலம் எந்தந்த வலைதளங்களுக்கு எவ்வளுவு ட்ராஃபிக் வருகிறது என பார்த்து ராங்கிங்க் போடுகிறது அலெக்சா ( எவ்வளவு குறைவான எண்ணிக்கையோ அவ்வளவு நல்லது ) . சரி, அலெக்சா ராங்கிங்க் ஏன் முக்கியம்?

1. உங்கள் வலைதளத்தின் மதிப்பை மற்றவர்கள் அலெக்சா ராங்கிங்க் மூலம் கணிக்கிறார்கள்.

2. நீங்கள் ஆட்சென்ஸ் தவிர மற்ற விளம்பரங்களை நம்பியிருந்தால் நல்ல அலெக்சா ரேங்கிங்க் இருந்தால் விளம்பர கம்பெனிகள் அதிக வருமானம் தருகிறார்கள்.

நமது வலைதளம் அல்லது ப்ளாக்கில் முன்னேற்றம் காண எளிய ஐந்து வழிகளை தொகுத்து அளித்திருக்கிறோம்… படித்து பின்பற்றுங்கள் !

  1. அலெக்ஸா ராங்க் டூல்பாரை முதலில் டவுன்லோட் செய்யுங்கள் ! அத்ற்கு நீங்கள் செல்ல வேண்டிய லிங்க் Alexa toolbar . இந்த டூல்பார் முற்றிலும் இலவசம். மேலும் , இது உங்கள் ப்ளாக்கின் அலெக்சா ராங்கிங்க் என்ன ? மற்ற தளங்களின் அலெக்சா ராங்கிங்க் என்ன என உங்களுக்கு தெரியப்படுத்தும்.
  2. உங்கள் வலைதளத்தில் அல்லது ப்ளாக்கில் ஒரு அலெக்சா ராங்க் விட்கெட் நிறுவுங்கள் ! Alexa rank widget.
  3. உங்கள் நண்பர்களை அலெக்சா டூல்பாரை டவுன்லோட் செய்து நிறுவிக் கொள்ள சொல்லுங்கள். அதன் மூலம் அவர்கள் உங்கள் தளத்திற்கு வருகை தரும்போது உங்கள் அலெக்சா ட்ராஃபிக் ராங்க் கூடும்.
  4. உங்கள் வலை தளம் உங்களுடையதுதான் என அலெக்சா வலை தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் . அதற்கு நீங்கள் போக வேண்டிய முகவரி…. http://www.alexa.com/siteowners
  5. உங்களைப் போன்ற அல்லது உங்களை விட நல்ல அலெக்சா ட்ராஃபிக் உள்ள தளங்களுடன் லிங்க் எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளூங்கள் !

 

இவை அனைத்தும் செய்தால் நிச்சயம் அலெக்சா ராங்க் நல்ல முன்னேற்றம் பெறும் !

You might also like

Comments are closed.