வலைப்பூ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய

791

 1,487 total views

தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு பயன்களும் புதிய தொழில்நுட்பங்களும் நமக்கு கிடைத்தாலும் இதற்க்கு எதிர்மறையான பிரச்சினைகளையும் நாம் தினமும் சந்திக்க வேண்டி உள்ளது. இதில் முக்கியமான பிரச்சினை virus மற்றும் malwares எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருட்கள். இவை ஆபத்தை உண்டாக்குகின்றன. Virus  பாதித்த தளங்களில் இருந்து ஏதேனும் விட்ஜெட்டையோ அல்லது அந்த தளத்தின் லிங்கோ உங்களின் பிளாக்கில் கொடுத்து இருந்தால் உங்களுடைய தளத்திற்கும் அந்த virus பரவிவிடும். இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே உங்களுடைய வலைப்பூவிலோ அல்லது இணையதளத்திலோ virus, malware மற்றும் தீங்கிழைக்கும் நிரலிகள் உள்ளதா என எப்படி சோதிப்பது என பார்க்க கீழே உள்ள வழிமுறையை பயன்படுத்தவும்.
  • இதற்க்கு முதலில் கீழே கொடுத்துள்ள linkல் சென்று அந்த குறிப்பிட்ட தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
  • உங்களுக்கு கீழே உள்ளதைப் போல window வரும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் உங்களின் வலைப்பூ அல்லது இணையதள முகவரியை கொடுக்கவும்.
 
  • முகவரியை கொடுத்த பின்னர் அருகில் உள்ள Scan Now என்ற பட்டனை அழுத்தினால் உங்களின் வலைப்பூவை Scan செய்ய ஆரம்பிக்கும்.
  • சில வினாடிகளில் உங்கள் வலைப்பூ அல்லது இணையதளம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு இறுதி முடிவு உங்களுக்கு காட்டும்.
  • மற்றும் எந்தெந்த தளங்களில் உங்கள் வலைப்பூவை சோதனை செய்தது என்ற தகவலையும் தரும்.
  • இந்த முறையில் உங்களுடைய தளத்தை சோதித்து உங்களின் பிளாக்கை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த தளத்திற்கு செல்ல http://www.urlvoid.com/

You might also like

Comments are closed.