நாசமாய் போன 2010ம், கெடுக்க வரும் 2011ம்.

19

2010 நினைவில் இருக்கிறதா நண்பர்களே? இதோ சில நாசமாய் போன 2010ன் சுவடுகள்.

1. அரசியல்வாதிகள் முன்னரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர்.

2. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமி.

3. பணத்திற்காக கொலை செய்யப்பட்டு தன் சொந்த சித்தபாவால் எரித்துக் கொலைசெய்யப்பட்ட சிறுவன்.

4. சன்னியாசம் போதித்து, பின் படுக்கையில் ஆன்மீக ஆராய்ச்சி செய்த மகான்.

5. வாரம் இரு முறை Rs. 0.20 , 0.40 Rs என உயர்த்தப்படும் பெட்ரோல் விலை.

6. இராணுவத்தால் நிர்வாணமக்கப்பட்டு, சித்திரவதை செய்து திரும்பி அனுப்பப்பட்ட நம் தமிழக மீனவர்கள்.

7. தன் சொந்த நிலத்தை விட்டு வெளிய செல்லமாட்டேன் எனப் போராடும் பழங்குடி மற்றும் மலைவாழ் மக்களை “மாவோயீஸ்ட்” என்று சொல்லி அழிக்கும் இந்திய இராணுவம்.

8. ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தத் துடிக்கும் இந்திய அரசு.

9. உண்மையிலேய மிகவும் உயர்ந்து போன அத்தியாவசியப் பொருள் விலைகள்.

10. தடுப்பு அணை கட்டும் கேரள அரசு.

11. கோடிக்கணக்கில் செலவு செய்து கொண்டாடப்படும் பயனற்ற செம்மொழி & தஞ்சை விழாக்கள்.

12. தன்மானம் இருந்த தமிழ் மக்களை பிச்சையாக இலவச TVக்காக கை ஏந்த வைத்த அரசு.

13. “எங்கள் ஜாதியை பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட இணமாக” அறிவிக்க வேண்டும் எனப் போராடும் சங்கங்கள்.

14. Orkut, Facebook இலும் ஜாதி, மதக் கொடி பிடிக்கும் படித்த இரண்டு கால் வானரங்கள்.

15. தெருவுக்கு தெரு சாராயம் வித்துப் பிழைக்கும் அரசு.

16. வெறும் 1ரூபாய் மட்டுமே கொடுத்து அரிசி வாங்கும் நிலையில் மக்கள்.

17. 3 ரூபாய் செலவில் மலம் கழிக்கும் அவலம்.

18. பகல் கொள்ளையாய் பேருந்து மற்றும் ஆட்டோ கட்டணம்.

19. தினமும் ஒரு வழிப்பறி செய்தி.

20. Traffic Signalலில் ஒரு 3-4 வினாடி கூட காத்திருக்க நேரம் இல்லாத பரபரப்பான மக்கள்.

21. “வரிசை” (Queue) என்றால் என்ன என்பதன் பொருள் தெரியாத மேதைகள்.

22. எவன் எங்கு செத்தாலும் “India Score” கேட்டு தன் நாட்டுப்பற்றைக் காட்டும் இளைய சமுதாயம்.

23. “நயன்தாராவின் இன்றய புருசன் யார்?” என முக்கிய செய்தி வாசிக்கும் “செய்தி தொலைக்காட்சிகள்”.

24. மக்களுக்கு குறைந்த வருமானம், ஆனால் ., “வரி, TASMAC, TOBACOO, PETROL, பேருந்து கட்டணம்“, என அவர்களின் பணத்தை அடித்துப் பறிக்கும் கேடுகெட்ட அரசுகள்.

25. அத்தியாவசிய செலவுகளில் ஒன்றாகிவிட்ட லஞ்சம்.

26. அதிகாரப் பிச்சை எடுக்கும் சில காவல் துறை கனவான்கள்.

எல்லாம் இருக்கிறது இந்த 2010இல்., போராட்ட குணம் இல்லாத பேடிகளாக நம்மை மாற்றத் துடிக்கும் கோழை சமூகமும் அதிகார அரசும் தங்களை அன்போடு 2011இல் வரவேற்கிறது.

இப்படிக்கு,
கார்த்திக்.

You might also like