ஸ்கைப்பின் வீடியோ கால்களை இனி அன்றாய்டு, ios,விண்டோவ்ஸ்10 மொபைலில் பெறலாம்:

56

இலவச வீடியோ மற்றும் கால் வசதிகளை ஏற்படுத்த உதவும் ஸ்கைப்பின் புதிய பதிப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம்  இனி  ஐபோன், ஐபேட் , விண்டோஸ் 10 மற்றும் ஆண்ட்ராய்டு  போன்ற மொபைல் சாதனங்களில்  பயனர்களுக்கு அளிக்கவுள்ளது.  இந்த அறிவிப்பை பத்து ஆண்டுகளாக வீடியோ காலிங் சேவையில் வெற்றிகரமாக நிறைவேற்றிய ஸ்கைப் தற்போது அதன் வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.   இதுவரை ஸ்கைப் உலகில் 2டிரில்லியன் நிமிட இலவச வீடியோ காலிங் சேவையை வழங்கி சிறப்பு செய்துள்ளது என மைக்ரோசாப்ட் நிறுவன துணைத் தலைவர் குர்தீப் பால் தெரிவித்துள்ளார். 2014-இல் குழு கலந்துரையாடல் இலவசமாக நுகர அனைத்து பயனர்களுக்கும் அறிவிக்கப்பட்டது.  தற்போது குரூப் வீடியோ காலிங் சேவை அனைத்து மொபைல் சாதனங்களிலும் கிடைக்கப் பெறவுள்ளது. இதனால்  நமக்கு பிடித்தவர்கள் எவ்வளவு தொலைவு இருந்தாலும் சரி   எதைப்  பற்றியும் கவலைப்படாமல் எவ்வளவு தொலைவாக இருந்தாலும்  பயனர்கள் தங்கள் நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும், அலுவலகத்தில் பணிபுரிபவர்களுடனும்  முகம் பார்த்து பேசி கொள்ளலாம். இந்த நுட்பம் இன்னும் இரண்டே வாரங்களில் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும்  இந்த குழு கலந்துரையாடலை உங்கள் மொபைலில் பெற, நீங்கள்  ஸ்கைபின் பத்தாம் ஆண்டுக்கான வெற்றி விழா கொண்டாட்ட வலைதளத்திற்கு சென்று முன்பதிவு செய்ய வேண்டும்.

 வீடியோ காலிங் சேவைகளில்  இது கண்டிப்பாக முதல் முறையாக உருவாக்கப்பட்ட செயலி அல்ல. ஏனெனில்  கூகுளின் ஹேங் அவுட்டு, லைன்  மற்றும் வைபர் , வீசாட்  போன்ற குறுந்தகவல்  செயலிகளும் வீடியோ அழைப்புகளை கொண்டுள்ளன. மேலும் ஹைக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம்  குழு கலந்துரையாடலில் 100 பேரை சந்திக்கும் வாய்ப்பை தொடங்கி வைத்தது.மேலும்  பேஸ்  டைம் மற்றும் பேஸ்   மெசேஞ்சர்  போன்றவைகள் வீடியோ காலிங் சேவையை பயனர்களுக்கு கொண்டு வரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு  வருகின்றனர். ஸ்கைப்பின் வீடியோ காலிங் சேவையில் கணினி திரையில் 25 பேரை கலந்துரையாடலுக்கு அழைக்க முடியும் என்ற நிலைமையில் இதே எண்ணிக்கை அன்றாய்டு  போன்  தளங்களில் கிடைக்குமா என்பதை பொருத்திருந்த்துதான் பார்க்க வேண்டும்.

You might also like
1 Comment