புத்தாண்டில் புது உறுதி மொழிகளுடன் கால் பதிக்க விரும்புபவர்களுக்கு….!

75

நம்பினாலும் நம்பாவிடிலும் இதோ வந்து விட்டது புதுப் பொலிவுடன்  புத்தாண்டு!!!நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியாக இனிப்புகளுடன் கொண்டாடிய  மகிழ்வதுடன் மட்டுமல்லாமல் பல உறுதி மொழிகளையும்  ஏற்றிருப்போம்.பல நேரங்களில் நாம் அவற்றை  சொல்லி விட்டு கடை பிடிக்காமல் விடுவதுண்டு . அந்த மாதிரியான தக்க சமயத்தில்  அவையனைத்தையும் கடைபிடிக்க நவீன தொழில் நுட்பம்  சற்று கை கொடுக்க வருகிறது.இந்த 9 பயன்பாட்டில்  ஒவ்வொருவரின்  உறுதி மொழிகளுக்கேற்ப அவற்றை நிறைவேற்ற  கை கொடுக்கும் வண்ணம்  இந்த பயன்பாடுகளை ஸ்மார்ட் போன்களில்  செதுக்கி தந்துள்ளனர்.

1.இந்த வருடத்தினுடைய  உங்களது  உறுதி மொழி அதிகமாக பல புதிய விசயங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்றால்?
உடனடியாக கியூரியாசிட்டி என்று அழைக்கபடும் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து உங்கள் நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக மாற்றலாம் . இதன் மூலம்  இன்றைய தேதி வரை நடந்த ஒவ்வொரு தகவல்களையும் அறிந்து அறிவை விரிவி படுத்திக் கொள்ளலாம்.

2..இந்த வருடத்தினுடைய  உங்களது  உறுதி மொழி, பணத்தை  மிச்சப்படுத்தி சேமிக்க வேண்டுமென்றால்?
மாவ்லப்ஸ் பயன்பாட்டின் மூலம்  உங்களது எதிர்காலத்தை பற்றிய திட்டங்கள வரவுகள் மற்றும் செலவுகள் என அனைத்தும் சரி பார்க்கப்படுகிறது. இந்த பயன்பாட்டின் மூலம்  உங்களது செலவுகளை வரவுகளிற்கேற்ப  செலவு செய்யும் அனைத்து நுட்பங்களையும்  கற்றுத் தருகிறது.

3. இந்த வருடத்தினுடைய  உங்களது  உறுதி மொழி அதிகமாக ஓய்வு எடுப்பதென்றால் ?
பல  நேரங்களில்  உங்களது வேலை பளுவை மறந்து  வேறு ஏதேனும் செயலில் ஈடுபட விரும்பும்போது  அவர்களுக்கு   தியானம் போன்றவற்றை  பரிந்துரைக்க ஹெட்ஸ்பேஸ் என்ற பயன்பாடு உதவுகிறது. இதன் மூலம் தினசரி உங்களை தியானம் செய்யவும்,செய்ய  தவறிய நாட்களையும்  நினைவூட்டுவதுமாக அமைந்துள்ளது. அதனால் எப்போதுமே வேலை செய்து கொண்டிருப்பவர்கள்  யோகா போன்றவற்றில் ஈடுபடுவதன் மூலம்  மூளைக்கு ஒரு நல்ல சக்தியையும் உடலுக்கு வலுவையும் தரவல்லது.

4.இந்த வருடத்தினுடைய  உங்களது  உறுதி மொழி அதிகமாக படிக்க வேண்டுமென்றால்?
நம்மில் பலர்  அதிகமாக படிக்க வேண்டுமென்று சில குறிக்கோள்களை வைத்திருந்தாலும் அவற்றுக்கான நேரத்தை ஒதுக்குவதில்லை . சில நேரங்களில் அதிக பக்கங்களை எவ்வாறு படிப்பதென்று எண்ணிவிட்டு அந்த பழக்கத்தை கை விட்டு விடுவோம்.ரீட்மீ பயன்பாட்டின் மூலம் ஒரு புத்தகத்தினை ஆப் லைனில் சேமித்து வைத்து படிக்கவும் . மேலும் முழுதாக படிக்க நேரமில்லாதவர்களுக்காக  முக்கியமான உள்ளடக்கங்களை தெரிந்துகொள்ள வண்ணமிட்டு காட்டும் சிறப்பும் செய்யப்பட்டுள்ளது.

5.இந்த வருடத்தினுடைய  உங்களது  உறுதி மொழி  உங்களுடைய வேலைப்  பளுவை  குறைக்க வேண்டுமென்றால்?
வேலையை அதிகமாக விரும்பும் பலர் மற்றும் அதிக நேரம் வேலையில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களும்  வெகு நேரம் கணினி முன் அமர்ந்து கொண்டே இருப்பது  கண்டிப்பாக உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அதிக நேரம் அமர்ந்து கொண்டே வேலை செய்யும் நபர்களுக்காகவே ஸ்டாண்ட் அப் என்ற பயன்பாட்டினை  அறிமுகபடுத்தியுள்ளனர். ஸ்டாண்ட் அப் மூலம்   சிறு சிறு இடைவெளிகளை நினைவூட்டலுடன்  வழங்கவிருக்கிறது. இந்த இடைவேளையின் போது  நாம் சிறிது நேரம் படிகளில் நடந்து விட்டோ அல்லது சிறிது இளைப்பாறிவிட்டோ  வரலாம்.

6.இந்த வருடத்தினுடைய  உங்களது  உறுதி மொழி  உங்களுடைய உணவுப் பழக்கத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென்றால்?

  யம்மிளிஸ் பயன்பாட்டின் மூலம் உங்களது உணவினை கட்டுபாட்டுடன் மேற்கொள்ளும்படியான ஒரு வழியை உருவாக்கித் தருகிறது. இதனால் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை  குறைந்த  கலோரிகளுடன் தரும் வண்ணம் அமைத்து தருகிறது. இது இந்த வருடத்தின் சிறந்ததொரு  உணவுக் கட்டுப்பாட்டை வழங்க தயாராக உள்ளது.
7.இந்த வருடத்தினுடைய  உங்களது  உறுதி மொழி  உங்களை  புதிதாக மாற்றிக் கொள்ள விரும்பினால்?
  24மீ பயன்பாட்டின் மூலம் உங்களது வேலை நேரங்களில் உங்களது உற்ற நண்பனாக மாறக்  கூடியது. அதாவது உங்களது அனைத்து வேலைகளையும் நொடியில் செய்து தரக் கூடியது. நீங்கள் அன்றாடம் செய்யக் கூடிய செயல்களை  உங்களது காலண்டர் , டைரி , மற்றும்  சமூக வலைத்தளம் போன்றவற்றிலிருந்து  சேகரித்து உங்களுக்கு நினைவூட்டும்.
8.இந்த வருடத்தினுடைய  உங்களது  உறுதி மொழி குறித்த நேரத்திற்குள் நிர்ணயிக்கபட்ட வேலையை முடிக்க  வேண்டுமென்றால்?
 கண்டிப்பாக இது ஒரு முழு பயன்பாடாக மட்டுமல்லாமல்   நம்மை குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு நேரம் தவறாமல் கூட்டிச் செல்லக் கூடிய ஒரு  கண்டிப்பான உதவியாளனாக இருக்கும். முக்கியமான இடங்களுக்கு  செல்ல வேண்டிய  நேரத்திற்கு  முன்னரே நினைவூட்டலை வழங்கிக் குறித்த நேரத்திற்கு சென்றடையச் செய்கிறது. இதனால்  ஒரு மின்சார  கட்டணத்தினையோ  அல்லது   மாதாந்திர மருத்துவமனை பரிசோதனை மற்றும் எரிவாயு , பால் போன்ற அன்றாட வேலைகளை மறக்காமல் செய்யவும் இது போன்ற பயன்பாடுகள் உதவுகின்றன. இந்த  வருடத்தில் எடுத்த உறுதி  மொழிகளை  நிறைவேற்ற இவை கண்டிப்பாக  உங்களுக்கு  உதவும்.

 

You might also like