360° கோண அளவில் படம்பிடிக்கும் கேமரா ..!

ரிக்கோ இந்தியா, நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ள புதிய வகை காமிராவில் 360° கோண அளவில் காட்சிகளை பதிவு செய்யும் அளவிற்கு நுட்பத்தை புகுத்தியுள்ளனர். ரிக்கோ தீட்டா S என்று அழைக்கப்படுகின்ற புதிய வகை கேமிரா மிகவும் மெல்லிதான எடை கொண்டதும் ஒரு பெண்ட்ரைவினைப் போன்ற உருவத்தோடு மிகவும் கையடக்க வசதிகளோடு தயாரிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பம்சங்கள் :
ரிக்கோ தீட்டாவின் 8GB நினைவகதத்தினைக் கொண்டு கோள வடிவ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சேமிக்கலாம்.   அதோடு அந்த புகைப்படங்களை கணினி (அல்லது ) மடிக்கணினிகளில் மைக்ரோ usbயின் உதவியுடன் சேமித்து வைத்துக் கொள்ளலாம். 25 நிமிட கால அளவுகளுக்குள் கோள வடிவ வீடியோக்களை எடுக்கக் கூடியது . பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களினை வை-பையின் உதவியோடு ஆப்பிள் (அல்லது) அன்ட்ராய்டு சாதனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

Screenshot_189-770x470
உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம். மற்றும் புகைப்படங்களை கூகுல் வரைபடம் , கூகுல்+ மற்றும்யூ டியூபின் ​ -360° வீடியோக்கள் போன்றவற்றில் அனுப்பலாம். இதில் பெரிதாக்கப்பட்ட இமேஜ் சென்சார்களும் 2.0 அளவு கொண்ட லென்சுகளும் இருப்பதால் குறைந்த வெளிச்சத்திலும் தரமான புகைப்படங்களை எடுக்க கூடிய அளவிற்கு சிறந்தது.
மின்கலன் சேமிப்பை பொறுத்த வரையில் 300 சாட்டுகள் வரை ஒத்துழைக்கும் எனினும் வீடியோக்கள் எடுக்கும் தேவைக்கேற்ப மின்கலனில் சேமிப்பில் வித்தியாசம் ஏற்படும் . இது ஒரு எழுதுகோலின் எடையை கொண்டிருப்பதால் இதனை கையாளச் சிறந்ததே . ஆரம்ப விலை ரூ.39,995 கொண்ட ரிக்கோ தீட்டாவின் கேமிராவினைக் டிசம்பரிலிந்து சந்தையில் கிடைக்கும்படி செய்துள்ளனர்.

Leave a Reply