இந்த வித்தைகள் தெரிந்தால் , நீங்களும் சாய் பாபா தான் (see the video)
கண்கட்டு வித்தை காட்டுபவர் கடவுள் அல்ல.சாய் பாபா ,இவருக்கு பக்தர்கள் உண்டு என்று தெரியும் ஆனால் இன்று தான் இவருடைய உண்மை முகத்தை காட்டும் வீடியோவை காண நேரிட்டது. கடவுள் என்பவர் யார், எவர் ஒருவர் மற்றொரு உயிரிடம் அன்பு காட்டுகிறாரோ அந்த ஆத்மாவே கடவுள் ஆகிறது. ஒரே பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மை போன்று தோன்றும் அதுவே தான் காவி உடை உடுத்தியவன் கடவுள் என்று நம்ப வைத்துவிடுகிறது. பக்தி உள்ளம் கொண்டவர்களை தாக்குவதற்காக இந்த பதிவு இல்லை. மகர ஜோதியும் போலியானது தான். மனிதன் தன்னை கத்துக் கொள்ள போட்ட சட்டங்கள் போன்று , காவி உடை அணிந்தவர்கள் நடத்தும் நாடகமே இந்த கண் கட்டு வித்தைகள். மனிதன் ஒவ்வொருவருக்கும் ஒரு பிடிமானம் தேவைப் படுகிறது, இங்கே அது நம்பிக்கை என்ற பெயரால் ஒரு சுயனலவாதியின் பிடியில் மாட்டிக் கொள்கிறது. சாமிக்கும் , ஆசாமிக்கும் வேறுபாடு உண்டு .
நமக்கு எது தீங்கு என்று நினைக்கிறோமோ அதை பிறருக்கு செய்யாமல் வாழ்ந்தாலே வையகம் செழிக்கும். 🙂
குறிப்பு : இந்த வீடியோ கூட போலியானது என்று சொல்ல ஆட்கள் உண்டு 🙁 .