கார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்

2,014

 6,997 total views

முன் குறிப்பு: இந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்தால் நீங்கள் விரைவில் ஒரு SEO வல்லுநர் ஆவது உறுதி.

உங்களுக்கு ஒரு மகிழ்வான செய்தி., நீங்கள் இனிமேல் சிரமப் பட்டு SEO செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் கவனம் அனைத்தையும் இரண்டு முக்கிய காரணிகளில் மட்டும் செலுத்தினாலே போதும். பிறகு கொஞ்சம் நடைமுறை வழக்கில் உள்ள அடிப்படை SEO உத்திகளை மட்டும் செய்யுங்கள்.

கடந்த மாதம் Google Penguin Update வெளிவந்தது.  இது பாண்டா மேம்படுத்துதலுக்குப் பின் ஒரு வருடம் கழித்து வந்துள்ளது.

ஒரு 10 வருடமாக Google தமது தேடு பொறியை ஏமாற்றி முதலிடம் வரும் SEO செய்வோர் அனைவரையும் “Web Spammers” எனும் கீழ்தரமாகவே அழைத்து வந்துள்ளது. Matt Cutts எனும் கூகல் பொறியாளர் தான் Google தேடு பொறியின் மூளை போன்றவர். இவர் எப்போதும் SEO செய்வோரை மதித்ததில்லை. அவர் மீது கோவம் கொண்டு ஒண்ணும் ஆகப்போவதில்லை.

இப்போது இந்த பென்குயின் பற்றி விரிவாக அலசுவோம்.

#1:  “Content is King”  இது SEO செய்வோர் மத்தியில் புழங்கும் ஒரு வழக்கு.  அதாவது., நீங்கள் என்னதான் மாரடித்து SEO செய்தாலும் உங்களின் தளத்தில் உருப்படியான தகவல்கள் இல்லையென்றால் ஒரு பயனும் இல்லை.

#2.  உங்களின் தளத்தில் உள்ள பக்கங்கள் பலருக்கும் பிடித்த வன்னம் இருக்க வேண்டும். அதாவது உங்களின் பக்கத்தை பலரும் சமூக தளங்களில் பகிர்ந்திருக்க வேண்டும்.

உங்களின் தளத்தில் இருப்பது உருப்படியான தகவலா இல்லையா?

ஒரு SEO வல்லுநர்  பின் வரும் SEO செயல்முறைகளை செய்கிறார் என வைத்துக் கொள்வோம்.

அவரின் தளம் மதுரையில் உள்ள ஒரு தங்கும் விடுதியின் தளம். உதாரணத்திற்கு “TechTamil Tower Hotel”.

URL: www.TechTamilTowerHotel.com

#1.
Pages: http://techtamiltowerhotel.com/cheap-madurai-budget-hotel.html   (About Page or Hotel Features Page)
http://techtamiltowerhotel.com/cheap-hotel-booking-madurai.html   (Booking Form Page)
http://techtamiltowerhotel.com/how-to-book-a-hotel-in-madurai.html   (FAQ Page of Hotel)

#2.
பெரும்பாலும்  நீங்கள் இது போல் Keyword Stuffed முகவரிகளை உருவாக்குவீர்கள். பின்னர் உங்களின் meta keywords & description னும் இதே போன்ற சொற்களால் அலங்கரிக்கப்படும்.

#3.
பின்னர் இந்த தொடுப்புகளை (Link URLs) எடுத்துக் கொண்டு பல Free Classifieds, Directories, Blog Comments, Forum Signatures போன்றவற்றில் இணைப்பீர்கள்.

#4.
இதற்கு அடுத்த படியாக “Link Farm” எனப்படும் போலியான Blogs & Articles ஐ  WordPress , Blogger, Blog.co.in, Posterous, Tumblr போன்ற தளங்களில் புதிய Blogsஐ உருவாகுவீர்கள். பின்னர் அந்த அனைத்து தளங்களில் இருந்தும் TechTamilTowerHotel தளத்திற்கு ஒரு தொடுப்பை கொடுப்பீர்கள்.

#5.
பிறகு இவை அனைத்தையும், Digg, Reddit, SlashDot போன்ற தளங்களில் கொடுப்பீர்கள். மற்றும் பிற திரட்திகளிலும் கொடுப்பீர்கள்.

#6.
அடுத்து சமூக தளங்கள் அனைத்திலும் Facebook, Twitter, LinkedIn, Pinterest, Google+ அனைத்திலும் பகிர்வீர்கள்.

#7.
இன்னும் சில படிகள் மேலே போய்., பல SEO Automation மென்பொருள்களை பயன்படுத்தி பல தளங்களில் உங்களின் தொடுப்புகள் போய்ச்சேர வழி செய்வீர்கள்.

#8.
சில நேரங்களில் பணம் கொடுத்து அதிக Page Rank உள்ள தளங்களில் இருந்து உங்களின் தளங்களுக்கு தொடுப்புகள் தர பணம் கூட கொடுப்பீர்கள்.

#9.
nofollow tag பற்றி தெரியாமல் WikiPediaவில் தமது தொடுப்புகளை கொடுக்க முயற்சிக்கும் ஆசாமிகளும் உண்டு.

அப்பாடா., இவ்வளவும் செய்தாகிவிட்டது… இந்த கூகல் நம்ம தளத்தை எப்போ பஸ்டு பேஜூல காட்டும்னு ரெண்டு நாளைக்கு ஒருதடவ தேடிப் பார்த்துட்டே இருப்பீங்க…

ஒரு வழியா கூகல் பிராண்டி (Crawler)  கார்த்தியின் கைவண்ணத்தில் உருவான ஏதாவது ஒரு தொடுப்பைப் பிடித்து தளத்தில் வந்து சேர்ந்திருக்கும். வந்து பார்த்தால் தளத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நாலு பத்திக்கு மேல் எந்தத் தகவலும் இருக்காது.  இருக்கும் அனைத்தும் தகவல்களும் காந்தி காலத்தில் எழுதிய பாழடைந்த தகவல்களாக இருக்கும். எங்ககிட்ட ஏழு ரூம் இருக்கு அதுல நாலு ஸ்டூல் இருக்கு… இங்க பாருங்க அந்த அழக.. னு பதினாலு போட்டோ இருக்கும்.

இப்போ இந்த புதிய Penguin பிராண்டிக்கு ரெண்டு சந்தேகம் வந்திருக்கும்.

1.  ஏன் இந்தத் தளத்திர்க்கு இவ்வளவு தொடுப்புகள் அனைத்து விதமான இலவச தளங்களில் இருந்தும் வந்திருக்கிறது… ஆனால் இங்கே அவ்வளவு உபயோகமான அல்லது புதிய தகவல் ஏதும் இல்லையே?

2. இவனப் பார்த்தா “முப்பது நாளில் SEO செய்வது எப்படி” புத்தகம் படிச்ச ஆள் மாதிரியே இருக்கே…

ஏன் என்றால் நீங்கள் Google கண்ணில் பட வேண்டும் என்றே பல SEO உத்திகளைச் செய்துள்ளீர்கள். இதுவே உங்களின் தளத்தை ஒரு மதிப்பற்ற தளமாக எடுத்துக் கொள்ள ஒரு முக்கிய காரணம்.

சரி., இந்த Penguin Updateஐ சமாளித்து முதல் பக்கத்தை பிடிப்பது எப்படி?

1. உங்களின் தளத்தில், தளம் சம்பந்தப்பட்ட புதிய தகவல்கள் இடம் பெற வேண்டும்.

அந்தத் துறை சார்ந்த புதிய செய்தி,

  • ஹோட்டல்களுக்கு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிதுள்ளது.
  • ஹோட்ல்களின் சுற்றுலா வருவோர் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக செய்தி.

துறை சார்ந்த புதிய புள்ளி விவரங்கள்.

  • ஹோட்டல்களின் வளர்ச்சி 10% இருக்கும் என ஆமைசசர் தகவல்.

துறை சார்ந்த மற்றும் இடம் (மதுரை) சார்ந்த அறிவிப்புகள்.

  • வரும் சித்திரை திருவிழா முன்னிட்டு Tower Hotelலின் சிறப்பு ஏற்பாடுகள்.
  • வரும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு உங்களின் சிறப்பு சலுகைகள்.

முக்கியக் குறிப்பு: இது போன்ற தகவல்களை பிற தளங்களில் இருந்து Copy & Paste செய்யாதீர்கள். மற்றும் Google Translator இல் போட்டு English to French => French to German => German to English என மொக்கை மொழிபெயர்ப்பு செய்து போடாதீர்கள். உட்கார்ந்து உங்களின் சொந்த ஆங்கிலத்தில் எழுதி அதை ஒரு பக்கமாகப் போடுங்கள். கூகல் உண்மையான தகவல்களைதான் உங்களின் தளத்தில் இருந்து எதிர்பார்க்கிறது.. வெறும் வார்த்தை விளையாட்டு அல்ல.

இப்போது இது போன்ற தகவல்களை உங்களின் தளத்தின் முகப்பில் சிறிய Text Widgetகல் போல் போட்டு வையுங்கள். பின் அவற்றில் இருந்து முழு தகவல் பக்கத்திர்க்கு தொடுப்பு கொடுங்கள்.

மாதம் மூன்று முறையாவது புதிய தகவல்களை உங்களின் தளத்தில் இணையுங்கள்.. அவற்றை Facebook, Pinterest & Google+ ஆகிய சமூக வளைத்தலங்களில் பகிருங்கள். பகிரும்போது… வெறும் தொடுப்பை மட்டும் பகிராமல்.. பகிர்வு சார்ந்த தகவல்களை விளக்கியும்.. உங்களின் ஒரு சில நண்பர்களை Tag  செய்தும் பகிருங்கள்.

நீங்கள் கண்டிப்பாக Google+ தளத்திலும் தொடுப்பை பகிர்ந்து அதற்கு உங்களின் நண்பர்கள் மத்தியிலும் புதிய மக்கள் மத்தியிலும் பல +1 பெற முயற்சியுங்கள்.

இந்த Penguin Update இன் மிக முக்கியமான நோக்கங்களில் ஒன்று.. SEO செய்வோரை சமூக வளைத்தலங்களில் தங்களின் தொடுப்புகளை பிரபலப்படுத்த செய்வது. அதிலும் குறிப்பாக “Ghost Town”  ஆள் அரவமற்ற Google+ சமூக தளத்தை பலரும் பயன்படுத்த ஊக்குவிப்பதாகும்.

இவற்றைத் தொடர்ந்து செய்வதோடு அடிப்படை On-site SEO உத்திகளை சிறிதளவு செய்யுங்கள்.

உங்களின் எந்த SEO சந்தேகத்தையும் நமது கேள்வி பதில் பகுதியில் கேட்கவும்.

பின் குறிப்பு: Tech Tamil தளத்தில் உள்ள தகவல்களை Copy செய்து உங்களின் தளத்தில் பிரசுரிக்கும் சின்னத் தம்பிகளே… Google முதலில் இங்கே தான் வரும்.. பின்னர் உங்களின் தளத்தில் இதே தகவலைப் பார்த்தால் உங்களின் தளத்தை கொஞ்சம் சேர்த்தே தண்டிக்கும். ஒரு வேலை இங்கே உள்ள தகவல்களை கால்வாசி Copy செய்து இந்தப் பக்கதிர்க்கான தொடுப்பையும் செய்து கொடுத்தால் உங்களை இனி வரும் காலங்களில் கொஞ்சம் நன்றாகவே கவனிக்கும்.

You might also like
2 Comments
  1. anbu says

    நல்ல பதிவு சார் ஸேஓ பற்றிய தெளிவான தகவல் கொடுத்தமைக்கு நன்றி.. இது தொடர்பான பதிவுகள் இருந்தால் எனக்கு அனுப்பி வைக்கவும் நன்றி சார்.

    [email protected]

Comments are closed.