Layer effects plugin for Gimp
நாம் இதற்கு முன் gimp இலவச மென்பொருள் தொடர்பான சில பதிவுகளை பார்த்தோம். ஒருவேளை பார்க்காவிடில் இந்த தொடர்பிற்கு செல்லவும் Click Here. இந்த மென்பொருளை இன்னும் மெருகேத்த இப்பொழுது Script-Fu என்ற Plugin ஒன்றை நாம் உபயோகப்படுத்த போகிறோம். இதன் மூலம் Photoshop ல் நாம் உபயோகப்படுத்தும் லேயர் எபக்ட்ஸ்(Layer effects) ஐ நாம் கிம்ப்ல் (Gimp) உட்புகுத்த முடியும்.
List of effects
*Bevel Emboss
*Color Overlay
*Drop Shadow
*Gradient Overlay
*Inner Glow
*Inner Shadow
*Outer Glow
*Pattern Overlay
*Satin
*Stoke
செய்முறை
1. பின்வரும் தொடர்பில் இருக்கும் பைலை(File) ஐ பதிவிறக்கம் (Downlad) செய்யவும். Script Fu plugin
2. பதிவிறக்கம் செய்த zip பைலை Extract செய்து layerfx.scm என்ற பைலை எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு வேளை நீங்கள் உங்கள் கிம்ப் (Gimp) மென்பொருளை C drive ல் நிறுவி (install) இருந்தால் நீங்கள் பதிவிறக்கம் செய்த Layerfx.scm என்ற பைலை (File) பின்வரும் போல்டரில்(Folder) சென்று சேமிக்கவும்
C:Program Files (x86)GIMP-2.0sharegimp2.0scripts
அல்லது
C:Program FilesGIMP-2.0sharegimp2.0scripts
4. இப்பொழுது Gimp மென்பொருளை இயக்கவும் , அதில் Filters என்ற மெனுவிற்கு அருகில் Script-Fu என்ற மெனு இருக்கும். இதை உபயோகப்படுத்தி மேலே குறிப்பிட்ட Effects ஐ நீங்கள் உபயோகப்படுத்தலாம்.. ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.
Comments are closed.