கம்பியில்லா சாதனங்கள் அதன் 3 மடங்கு அதிவேக வளர்ச்சிக்கு ஸ்மார்ட் போனுக்கு நன்றி கூறியது :

444

 659 total views

கம்பியில்லா ஒலிபெருக்கி சாதனங்கள் அதன் மூன்று மடங்கு அதிக வேக வளர்ச்சிக்கு ஸ்மார்ட் போன்களுக்கு நன்றி கூறியுள்ளது. இந்த கம்பியில்லா சாதனங்கள் என்பன ஆப்பிளின் பீட் பீல் மற்றும் புளூடூத் ஒலிப்பெருக்கிகள் மற்றும் மைக்ரோ போன்கள் , ஹெட் போன்கள் போன்றவைகளே !.உண்மையில் இந்த சாதனங்கள் ஸ்மார்ட் போன்களை விட வளர்ச்சியில் மூன்று மடங்கு முன்னேற்றம் அடைந்துள்ளது .வியக்கத்தக்கதே !. இந்நிலையில் சீனா போன்ற முக்கிய நாடுகளில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது.

இதுவரை கம்பியில்லா சாதனங்கள் அனைத்தும் $38.5 பில்லியனை 7 வருடத்தில் பெற்றுள்ளதாக புது அறிக்கை ஒன்று கூறியுள்ளது . அப்படியானால் தற்போது முதல் 2022க்குள் வளர்ச்சி விகிதத்தின் படி 24 சதவிகிதத்தை எட்டி விடக் கூடும் என கூறியுள்ளனர்.இதனை ஒப்பிடுகையில் ஸ்மார்ட் போன்களின் ஐந்தாண்டு வளர்ச்சி விகிதத்தின் படி 2019 வரையும் 8 சதவீதம் மட்டுமே உயரும் என சர்வதேச டேட்டா கார்பரேசன் (IDC ) அறிக்கையில் தெரிவித்துள்ளது .
ஸ்மார்ட் போனின் சந்தையின் திட்டக் குறிக்கோள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Screen-Shot-2015-10-30-at-14.15.18-e1446186518336
தற்போது இந்த கம்பியில்லா சாதனத்தின் விற்பனையில் ஆப்பிள் , போஸ், ஹார்மான் , சென்ஹெய்சர், சோனி, பிளிப்ஸ் நிறுவனகள் முன்னிலையில் உள்ளன.சமீபத்தியமாக ஆப்பிள் SIRI தொழில்நுட்பத்துடன் ஆப்பிளின் புதிய தொலைக்காட்சி ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது. இதனால் அப்பிள் எப்போதும் அதன் புதுபுது தயாரிப்புகளை இடைவேளை ஏதுமில்லாமல் வணிக முன்னோக்குடன் வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது .
இந்த வளர்ச்சி கடந்த ஆண்டை விட தலைகீழாக உள்ளது என தெரிகிறது . ஏனெனில் தற்போது வட அமெரிக்கா அதன் வளர்ச்சியில் 29 சதவீதத்தை பெற்று முன்னணியில் உள்ளது. அதைப்போலவே மத்திய கிழக்கு ஆப்பரிக்க மற்றும் லத்தீன் போன்ற நாடுகளும் விற்பனையில் கணிசமாக வளரும் என எதிர்பார்க்கபடுகிறது . ஆனால் கடந்த ஆண்டில் ஒப்பிடுகையில் ஈரோப் மற்றும் ஆசியா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்தது .

இந்த அதிவேக வளர்ச்சிக்கு காரணம் ஸ்மார்ட்போன்கள் , மாத்திரைகள் மற்றும் பல மல்டி மீடியா சாதனங்களின் தாக்கமே ! இவைகளால்தான் கம்பியில்லா சாதனங்களின் தேவை அதிகமாகி அதன் மூலமாக விற்பனை அதிவேக வளர்ச்சி அடைந்துள்ளது என சந்தையில் ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Comments are closed.