சிங்கப்பூருக்கு வருகிறது புதிய 4G LTE சாம்சங் Galaaxy S3
1,469 total views
TechTamil தளத்தின் வாசகர்களில் சிங்கப்பூர் சிங்கங்கள் கணிசமாக உள்ளனர். இது அவர்களுக்கான பிரத்யோகமான செய்தி.
புதிய ஆன்ட்ராய்ட் பதிப்பு:
வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து நீங்கள் உங்களின் Galaxy S3 கைப்பேசியில் உள்ள இயக்கு தளத்தை , புதிய Android 4.1 Jelly Bean பதிப்பாக புதுப்பித்துக் கொள்ளலாம். உங்களிடம் Unlocked கைபேசி இருந்தாலும் அதுவும் புதுப்பிக்கப்படும்.
Galaxy Note & S2 வகை கைபேசிகளும் புதுப்பிக்கப்படலாம் என தெரிகிறது.
புதிய Galaxy S3 LTE in Singapore:
4G தொழில்நுட்பமான LTE வகை S3 கைபேசிகளை இந்த மாதம் இறுதியில் சிங்கப்பூரில் அறிமுகம் செய்யவுள்ளது சம்ஸ்சங் நிறுவனம். TELCO மானியம் (telco subsidies) இல்லாமல் இதன் விலை S$998 வெள்ளிகள் இருக்கும்.
StarHub, M1 & SingTel நிறுவனங்களுடன் 4G LTE இணைப்புடனும் இந்த புதிய S3 LTE கைபேசி விற்பனைக்கு வர உள்ளது.
இதன் சிறப்பம்சங்கள்:
- 2GB RAM
- Android 4.1 Jelly Bean
- Dual-Core S4 Qualcomm Chip
தென் கோரிய மற்றும் அமெரிக்க மாடல்களில் உள்ளது போல் இதில் Quad-Core வகை செயலி(Processor) இருக்காது.
Comments are closed.