இந்தியாவின் மிகப்பெரிய இணைய மின்னணு வணிக தளமான பிளிப்கார்டின் தலைமை செயல் அதிகாரியாக சச்சின் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மற்றும் இதற்குமுன் பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த திரு.சச்சின் பன்சால் நிர்வாகத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அமேசான் போன்ற இணைய வர்த்தக நிறுவனங்களின் ஆதிக்கத்தால் ஏற்பட்ட பிளிப்கார்ட்டின் சரிவினை ஈடுகட்டும் வகையில் பின்னி பன்சால் உழைக்க வேண்டியிருக்கும். மேலும் பிலிப்காரட்டின் ஒட்டு மொத்த வணிகம் சம்ந்தபட்ட (commerce, Ekart and Myntra) அனைத்து தளங்களையும் கவனிக்கும் பொறுப்பில் உள்ளார். கூடவே மனித வளங்கள், நிதி, சட்டம், அலுவலக தகவல் தொடர்பு மற்றும் கார்ப்பரேட் மேம்பாட்டு உட்பட பெருநிறுவன செயல்பாடுகளையும் கவனிக்கும் பொறுப்பில் உள்ளார்.

பிளிப்கார்ட் நிறுவனம் எட்டு வருட பயணத்தில் 60% பங்கு சந்தையை மொபைல் வாணிகத்தில் கொண்டு ஈட்டியுள்ளது. இந்த வளர்ச்சியை தொடர்ந்து அடுத்தபடிக்கு கொண்டு செல்லும் வகையிலான அனைத்து திறமைகளும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு இருப்பதால் கூடிய விரைவில் பிளிப்கார்ட் நிறுவனத்தினை அடுத்த கட்டத்திற்கு சேர்க்க முடியும் என பிளிப்கார்ட் நிறுவனத்தின் CEO பின்னி பன்சால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ஆன்லைன் ஆடை விற்பனை தளமான Mintra நிறுவனத்தைப் பிளிப்கார்ட் நிறுவனம் வாங்கிய பின் இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் பன்சால் பிளிப்கார்டின் Commerce தளத்தின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். தற்போது செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாக மாற்றங்களில் இனி முகேஷ் பன்சால் கூடுதலாக விளம்பர வர்த்தகத்திற்குத் தலைமை வகிப்பார் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது.அமேசான். ஸ்நாப்டீல் போன்ற மற்ற வணிக தளங்களின் வரவால் அதிகம் சரிவை சந்த்திதுள்ள பிளிப்கார்ட்டின் நிலையை திரு. பின்னி பன்சால் சரி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.