மோட்ரோலாவின் நொறுக்கினாலும் உடையாத டர்போ 2 போன்கள் :

515

 866 total views

எவ்வளவு செலவு செய்து போன் வாங்கினாலும் அந்த போனை கீழே போட்டு உடைத்தால் அனைத்தும் வீணாகிவிடும் . ஆனால் வேரிசான் மற்றும் மோட்ரோலா நிருவனத்தினர் அறிமுகபடுத்தியுள்ள இந்த சாதனம் எப்படி போட்டு உடைத்தாலும் நொறுங்காத தன்மையுடையதாக உள்ளது. இந்த பாதுகாப்பு அம்சம் சாதனத்தின் திரையை, சாதனம் கை தவறி கீழே விழும்போது நொருங்குவதிலிருந்து காப்பாற்றுகிறது.

RUTH-DROPPING-PHONE-ANIMATION1

இன்று காலை வேரிசான் மற்றும் மோட்ரோலா நிருவனத்தின் அடுத்த தலைமுறைக்கான கீழே விழுந்தாலும் உடையாத நோக்குடன் தயாரிக்கப்படுள்ள டிராய்டு போனை அறிமுகபடுத்தினர் . இந்த இரண்டு போன்களில் டர்போ என்பது மிகவும் சிறப்பான வசதி கொண்டது. அதிவேக மின்கல சேமிப்பு திறனும் அதிக சேமிப்பும் கூடவே சிறந்த செயலிகளையும் கொண்டுள்ளது.மற்ற சாதனங்களை ஒப்பிடுகையில் இது எவ்வளவு சிதறடித்தாலும் உடையாத ஒரு சிறப்பைக் கொண்டுள்ளதுதான் இதன் முக்கிய அம்சமே.
இந்த பாதுகாப்பு கவசத்தை சோதிக்க பலமுறை கீழே போட்டு நொறுக்கிய போது 30 முறையும் திரைக்கு எந்த சிறு சேதாரமும் ஆகவில்லை என்பது ஆச்சரியமே! மற்ற இடங்களில் சிறு கீறல்கள் இருப்பினும் திரையில் எந்த இடர்பாடுகளும் ஏற்படவில்லை என்பது சோதனையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது .

மோட்ரோலா  டர்போ சாதனத்தின் சிறப்பம்சங்கள்:
➤➤48 மணி நேரத்திற்கு நீடித்த பேட்டரி
➤➤உலகிலேயே சிறந்த அதிவேகமான டர்போ பவர் சார்ஜர்கள் இருப்பதால் 15 நிமிடத்தில் பெரும் மின்திறனைக் கொண்டு 13 மணி நேர சேவையைப் பெறலாம்.
➤➤21MP கேமராக்களும் 5MP முன் எதிர்கொள்ளும் கேமிராவும் உள்ளன . இந்த அம்சம் முதல் மூன்று சிறந்த சாதனங்களில் மட்டுமே உள்ளதென ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
➤➤ஸ்நாப்டிராகன் 810 மற்றும் 2.0GHZ quad -core cpu உடன் மிகச் சிறந்த செயலியைக் கொண்டுள்ளது.
➤➤5.4 அங்குல அதிவேக வர்க்க தீர்மானத்தைக் கொண்டுள்ளது.
➤➤விரிவாக்கம் கொண்ட மைக்ரோ sd கார்டு சேமிப்பு :
இதில் டெராபைட்டுகள் அளவிற்கு சேமிப்பு இருப்பதால் மிகவும் அதிகமாக வீடியோக்கள் , புகைப்படங்கள் , இசை மற்றும் பல பயன்பாடுகளையும் விருப்பட்ட அளவுக்கு சேமிக்கலாம் .
முதல் முறையாக டிராய்டு போனில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிசைன்களைக் கொண்டு உங்களுக்கு பிடித்த விதத்தில் மோட்டோ மேக்கர்களைக் கொண்டு உருவாக்கலாம்.
➤➤இதன் வழியாக உங்களுக்கு தகுந்த விதமான வடிவமைப்பை தேர்ந்தேடுக்கலாம். உதாரணமாக மென்மையாகவோ அல்லது பாலிஸ்டிக் நைலான் கொண்டோ தேர்ந்தேடுக்கலாம் .
➤➤மேலும் சாதனத்தை வாங்கிய இரண்டு வருடத்திற்கு ஒரு முறை உங்கள் மொபைலை மறுசீரமைத்துக் கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படுகிறது.

 

இதனால் குழந்தைகள் போனை உடைத்தாலும் எதைப் பற்றியும்  கவலைப்படாமல் அவர்களிடம் தைரியமாக போனைக்  கொடுக்கலாம்  .இந்த மேக்ஸ் 2 மற்றும் டர்போ 2 ஆகிய இரண்டும் இணையத்தில் அக்டோபர் 29லிருந்து கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. டிராய்டு டர்போ $624 க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் மாதம் $26 ஐ 24மாதங்களுக்கு செலுத்தி வெரிசானின் 32GB போனைப் பெறலாம். அதேபோல் மாதம் $30 செலுத்தி 64GB சாதனத்தை பெறலாம். டிராய்டு மேக்ஸ்2 வை $16 செலுத்தியும் பெறலாம்.

You might also like

Comments are closed.