4000Mah பேட்டரி நீட்டிப்பு கொண்ட Meizu metal 2 மொபைல் :

629

 1,012 total views

 Meizu நிறுவனமானது ஸ்மார்ட் போன்களை தயாரித்து வழங்கக் கூடிய சீன நாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் ஆரம்பித்து பதிமூன்று வருடங்களாகவே பல வகை ஸ்மார்ட் போன்களை தயாரித்து வழங்கி வருகிறது. அந்த வரிசையில் Meizu metal 2 வகை ஸ்மார்ட் போனினை தயாரித்து ஜூன் 13 அன்று வெளியிட தயாராகி உள்ளது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த Meizu metal 2 ஸ்மார்ட் போனின் முக்கிய அம்சங்கள் பற்றிய தகவல்கள் சீனாவின் மிக முக்கிய தொலை தொடர்பு நிறுவனமான “தீனா” வெளியிட்டுள்ளது. Meizu ஸ்மார்ட் போனனது LED ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் பின்புற கேமராவினையும் 5மெகாபிக்சல் முன் கேமராவினையும் கொண்டுள்ளது. மேலும் 4000mAh பேட்டரி பேக் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மேலும் மேற்கூறிய அனைத்தும் அண்ட்ராய்டு 5.1 லாலிபாப் சார்ந்த இயங்கு தளத்தில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். 5.5-அங்குல திரை மற்றும் HD (1920×1080 பிக்சல்கள்) காட்சி கொண்ட ஸ்மார்ட் போனின் எடை 166 கிராம் ஆகும். இவற்றுள் இணைப்பு விருப்பங்கள் 4ஜி, LTE , Wi-Fi, ப்ளூடூத் 4.1 , மற்றும் ஜிபிஎஸ்  ஆகியவையும் அடங்கும். இவையனைத்தும் M3 நோட் ஸ்மார்ட் போனின் அம்சங்களைப் போன்றே உள்ளது. முந்தைய வதந்திகளைப் பொறுத்தவரையில் 16GB வகை , Meizu 2 ஸ்மார்ட்போன் சுமார் ரூ. 10,100-க்கும், 32GB ஸ்மார்ட்போன் சுமார் ரூ. 12,200க்கும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Comments are closed.