Lenovo-வின் புதிய IdeaPad

714

 1,560 total views

Games வசதிகளை support செய்வதற்காக பல நிறுவனங்கள் தங்கள் டேப்லெட்டுகள், smart phones மற்றும் notebook-களை அதிக சக்தி கொண்ட அளவில் உருவாக்குகின்றனர். குறிப்பாக இந்த devives RAM, processors மற்றும் graphics அக்சிலரிங் யூனிட்டுகள் போன்றவை அதிக செயல் திறனுடன் இருக்கும்.

அந்த வகையில் தற்போது லெனோவா நிறுவனம் ஒரு புதிய நோட்புக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த புதிய நோட்புக்கின் பெயர் Idea Pad Y470p ஆகும். இந்த நோட்புக் வெளி வருவதற்கு முன்பாகவே ஏராளமான ஆர்டர்கள் குவிந்து விட்டன. இந்த புதிய  நோட்புக் பழைய Y470 நோட்புக்கிற்கு அடுத்து வந்துள்ளது.

இந்த நோட்புக்கின் முக்கிய அம்சங்களைப் பார்த்தால் இது 14 inch அளவில் HD வசதி கொண்ட அகல திரையைக் கொண்டிருக்கிறது. இந்த திரையின் pixel resolution 1366 x 768 ஆகும். கேமராவைப் பொருத்த மட்டில் இந்த நோட்புக் வீடியோ recording வசதி கொண்ட 2 மெகா பிக்சல் webcam கொண்டுள்ளது.

அதுபோல் சேமிப்பு வசதியைப் பார்த்தால் இந்த நோட்புக் 8GB DDR3 RAM, 750 GB (5400 ஆர்பிஎம்) HDD  அல்லது 1TB HDD (தேவைப்பட்டால்)யைக் கொண்டுள்ளது. தகவல்களைக் கையாள wifi 02.11 பி/ஜி/என், இடிஆருடன் கூடிய bluetooth v2.1, USB  3.0 மற்றும் HDMI out போன்ற அணைத்து இணைப்பு வசதிகளையும் இந்த நோட்புக் வழங்குகிறது.

மின் திறனிற்காக இந்த நோட்புக் 6 செல் கொண்ட பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த பேட்டரி 4 – 5 மணி நேர இயங்கு நேரத்தை வழங்குகிறது. மேலும் இந்த நோட்புக்கில் 6 இன் 1 card reader-ம் உண்டு.

மற்ற அம்சங்களைப் பார்க்கும் போது இந்த Y470p நோட்புக் ஜிகாபிட் எர்த்நெட் போர்ட் மற்றும் ப்ளூரே ட்ரைவையும் கொண்டிருக்கின்றது. இதன் எடை 4.9 பவுண்டுகள் மட்டுமே. மேலும் இந்த நோட்புக் விண்டோஸ் 7 Home Premium 64 பிட் இயங்கு தளத்தில் இயங்குகிறது. அதுபோல் CPU Intel Core i7 2670 processor  (2.2 ஜிஹெர்ட்ஸ், 6 எம்பி கேச்) மற்றும் ஜிபியு எஎம்டி ரேடியோன் எச்டி 7690 மற்றும் 1 ஜிபி மெமரியையும் கொண்டிருக்கிறது. இதன் சந்தை விலை இன்னும் வெளியிடப்படவில்லை. இது 1200 அமெரிக்க dollar-கள் இந்திய ரூபாயில் சுமார் 60,000/- இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Comments are closed.