HTC HD7 மொபைலின் திறனாய்வு

1,005

 2,644 total views

வளர்ந்துவரும் மொபைல் சந்தையில் புதிய புதிய தொழில் நுட்பத்தை அறிமுகபடுத்தும் சிறந்த கம்பெனிகளில் ஒன்று HTC. இவர்களின் புதிய மொபைல் HTC HD7  இதை மூன்றாவது அவதாரம் எனலாம். ஏனனில் இதற்கு முன்னதாக வந்து மொபைல் சந்தையில் பல மாற்றங்களை ஏற்படுத்திய HTC HD2-ம் sprint’s EVO 4G-ம்  முதல் மற்றும் இரண்டாவது அவதாரம் ஆகும். இப்போது நாம் பார்க்க போவது HTC HD7.  இது ஒரு சிறந்த ஸ்மார்ட் போன்களின் ஒன்று எனலாம்.

BUNDLE (மொபைல் உடன் இணைத்து வருவது ):

  • HTC HD7  Mobile
  • Battery
  • USB Cable
  • 3.5mm Stereo headset
  • Power Adapter
  • Start here Guide
  • Quick Guide
  • Safety and Regulatory Guide

கட்டுமானமும் அதன் வடிவமைப்பும் (Design And Build) :

HTC HD7 மிகசிறந்த வடிவமைப்பும் சிறந்த சௌகரியமும் கொண்டது. இதன் display 4.3inch-ம் 11.2mm-ம் தடிமன் கொண்டது. இவை முழுக்க முழுக்க தொடுதிரை வடிவமைப்பும் கொண்டது.  இதன் கீழ் பகுதியும் மேல் பகுதியும் பேசுவதற்கும் கேட்பதற்குமாக அழகான வலை போன்ற வடிவமைப்புடன் காணப்படுகிறது.

இதன் கீழ்பகுதியில் மூன்று தொடு Button-கள் உள்ளன. இப்பகுதி Display உடன் ஒப்பிடுகையில் சற்று கடினமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை சிறப்பானதாக கருதப்பட்டாலும், இவற்றிலும் சில குறைகள் உள்ளன. நாம் ஒரு Game-மோ அல்லது ஒரு Application-னோ உபயோகிக்கும் போது நமது விரல் தெரியாமல் அந்த Button-களின் மேல் பட்டால் உடனடியாக அந்த Game-மோ அல்லது அந்த  Application-னோ மூடப்படுகிறது. அதனை தொடர மீண்டும் முதலில் இருந்து வரவேண்டிஉள்ளது. ஏனனில் இவற்றில் Mulitprocessing இல்லை.

இவற்றின் கீழ்பகுதியில் USB மற்றும் HeadPhone மாட்டுவதற்கான இரண்டு  Port-கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மேல் பகுதியில் Power Button-ம் வலது புறம் Volume Control Button மற்றும் Camera Button உள்ளது. இதில் Camera Button  மட்டுமே சிறப்பாக செயல் படுகிறது. Power Button மற்றும் Volume Control Button மிகவும் மென்மையாக உள்ளதால் அதனை நம் பாக்கெட்களில் வைக்கும் போது அழுத்தத்தின் காரணமாக செயல்பட ஆரம்பிக்கின்றன, பல நேரங்களில் OFF-ம் ஆகின்றன.

இதன் பின் புறம் 5MP கேமரா மற்றும் இரண்டு LED Light-களும் உள்ளன. இவற்றின் மேல் பகுதியில் பித்தளையால் ஆன ஓர் Stand வடிவமைக்கப்பட்டுள்ளது அது Camera-வின் மேல் மூடுவதுபோல் உள்ளது. ஆனால் அந்த Stand சிறந்த பயனளிப்பதாக தெரியவில்லை ஓர் சிறு அதிர்வை கூட தாங்க கூடியது அல்ல. அந்த Stand-டை முடிய பின்பும் கூட
சிறிய இடைவெளி இருப்பது போன்ற ஓர் உணர்வை அந்த மஞ்சள் நிறம் கொடுக்கிறது. இந்த ஸ்டாண்டை ஒவ்வரு முறை திறந்து மூடும் போதும் ஓர் அழகான “கிளிக்” என்ற சப்தத்தை தருகிறது.

Battery கவர் மேல் புறமாக திறப்பது போல் வடிவமைக்க பட்டுள்ளது. இதன் திறன் 1230MAh ஆகும். Battery கவர் முழுவதுமாக மூடிய பிறகும் கூட சிறிய மிலி மீட்டர் அளவு இடைவெளி உள்ளது. அதன் மூலம் உள்ளே உள்ள SIM Card-ஐ கூட பார்க்க முடியும் என்றால் நினைத்து பாருங்கள் அதன் இடைவெளியே…

காட்சி (DISPLAY):

HTC HD7-ல் display 4.3inch-ம் 800×480 Resolution-ம் கொண்ட TFT LCD ஆகும். இதில் படத்தின் தரம் விலை குறைந்த LCD TV-யை போலவும் Image Gallery-யை வேகமாக சுற்றும் போது ஒரு ஆவி ஓடுவது போலவும் உள்ளது. மற்றும் கலரை பிரித்து அறியும் தன்மை சிறப்பாக இல்லை, உதாரணமாக Windows Phone 7 சிவப்பு நிறம் ஆரஞ்சு வண்ணம் போல தெரிகிறது. இதில்  Contrast, Black Level மற்றும் சூரியிய ஒளியில் போனின் தன்மை ஆகியவை மிகவும் மோசமாக உள்ளது. இதில் சந்தோஷமான விஷயம் என்றால் அதன் தாராளமான Display மட்டுமே.

வன்பொருள் மற்றும் மென்பொருள் (HARDWARE AND SOFTWARE):

HTC HD7-ல் Qualcomm’s Snapdragon Platform பயன்படுத்தபடுகிறது.  Desire HD and Desire S ஆகிய மொபைல்களில் இரண்டாம் தலை முறை MSM8255 பயன் படுத்த படுகையில், அதன் பின் வந்த HTC HD7-லோ முதலாம் தலை முறை QSD8250 பயன் படுத்தபடுகிறது. இதனால் அதன் வேகம் குறைகிறது. இதில் 576MB RAM, 512MB ROM மற்றும்  16GB Memory-ய் உள்ளடக்கியது, இதன் Memory கூட்ட முடியாது.

ஒரு சில அடிப்படை பயன்கள் கூட இதில் சரியாக இல்லை, உதாரணமாக Copy And Paste, Multitasking.

தொடர்பு (CONNECTIVITY):

இது ஒரு Quad band GSM மொபைல், இதில் HSPA, Wifi 802.11n, Bluetooth 2.1 உடன் EDR மற்றும் AGPS உள்ளது. மேற்கண்ட அனைத்தும் சிறப்பாக செயல் படும் வண்ணம் வடிவமைக்க பட்டுள்ளது. இதில் உள்ள 3G HSPA-ல் Downloading Speed 7.2Mbps வரையும் Uploading Speed 2Mbps வரையும் இருக்கும். இதில் உள்ள Internet explorer Browser அதி வேகமாக செயல் படுகிறது மற்றும் இதன் சிறப்பு அம்சம் Fast Page Loading மற்றும் Smooth Scrolling.

Internal GPS Antana மற்றும் Bing Map உள்ளது,  Bing Map ல் அதிகமான விபரங்கள் இல்லை என்றாலும் கூட  Google Map  போன்று சிறப்பாக செயல் பட முயற்சி செய்கிறது. Data வை Transfer செய்வதற்கும் , நம் விருப்பம் போல Application download செய்வதற்கும் Zune Software பயன் படுத்த படுகிறது. ஆனால் இதன் memory 16GB மட்டுமே என்பதை நாம் நம்  மனதில் கொள்ள வேண்டும்.

பல்லூடகம் (MULTIMEDIA):

(i) நிழற்படக்கருவி (Camera):

HTC HD7  ல் 5Mega Pixel திறன் கொண்ட கேமரா பயன் படுத்தப்படுகிறது. இது ஆட்டோ Focus மற்றும் 2 LED Light களை கொண்டது. இதில் உள்ளது போன்ற மோசமான கேமராவை நான் இது வரை எந்த மொபைல்களிலும் கண்டதில்லை. ஏனெனில் அதன் display மற்றும் photo களில் அதன் உண்மையான நிறம் தெரிவது இல்லை. அது மட்டுமல்லாது photo-கள்  மற்றும் Video-களின் நடுவில் ஓர் pink spot தெரிகிறது. இதில் உள்ள  Photo setting-ஐ ஒவ்வொரு முறையும் மாற்ற வேண்டிஉள்ளது,  ஏனெனில் Setting -யை  save செய்யும் option இதில் இல்லை.

இன்னிசை (Music) :

இங்கு Zune Player பயன் படுத்த படுகிறது. இதில் MP3, AAC மற்றும் wmv file களை Support செய்கிறது. இவற்றில் equalizer இல்லை ஆனால் தேவைப்படும் போதும் அதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் Audio வசதி சிறப்பாக உள்ளது, அவர்கள் தரும் 3.5mm Audio Jack Head Phone ல் Music மிகவும் நன்றாக உள்ளது. ஆனால் Loud Speaker இல் head phone சப்தத்தில் பாதி கூட இல்லை.

மின்கலம் (Battery Life):

HTC HD7 ல் 1230mAh திறன் கொண்ட Lithium Ion Battery பொறுத்தப்பட்டுள்ளது. இதில் 320min WCDMA-லும் 380min GSM-லும் தொடர்ந்து பேசலாம். மற்றும் WCDMA-ல் 320 hrs-ம், GSM-ல் 310 hrs-ம் தாங்கி நிற்கும் வல்லமை கொண்ட சிறந்த Battery ஆகும்.

தீர்வு (Verdict):

HTC HD7 ஒரு சிறந்த மொபைல் என்று சொல்ல தக்கது அல்ல. ஏனெனில் முடிவு பெறாத Software-ம் மற்றும் இடை நிலை தரம் கொண்ட Hardware உடனும் இருப்பதால் பயன் படுத்துவதில் ஒரு சோர்வு ஏற்பாடுகிறது.  இதில் முக்கியமாக Windows 7-ல் அதிக குறைபாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக Slick Interface, Zune Music Streaming, Camera, Loud Speaker என பல இடங்களில் இதன் தரம் குறைகிறது.

இதன் விலை ரூபாய் 25,999. நாம் கொடுக்கும் விலைக்கு இது தகுதியான மொபைல்தானா என்பது ஒரு பெரிய கேள்விகுறியே ?

உதாரண புகைப்படங்கள் மற்றும் நிகழ்படம் (Sample Videos And Photos):


நடுவில் தெரியும் Pink நிறத்தை உற்று நோக்குங்கள்.

இதன் இரண்டாவது படம் Samsung Wave2 வினால் எடுக்கபட்டது.

HTC HD7-னால் எடுக்கப்பட்ட நிழல்படகாட்சி:

HTC-HD7

You might also like

Comments are closed.