இலவச வை-பை சேவை : புவனேஸ்வரில் துவக்கம்

509

 723 total views

டிஜிட்டல்’ இந்தியா திட்டத்தின் கீழாக முக்கியமான ரயில் நிலையங்களில் உள்ள , பயணிகளுக்கு இன்டர்நெட்  சேவை  வழங்க, ரயில்வே முடிவு செய்ததன் படி   புவனேஸ்வர் ரயில் நிலையதில், இலவச ‘வை – பை’ வசதி,  அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் , ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான, ‘ரயில்டெல்’லிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ரயில் நிலையங்களில், இலவசமாக, ‘வை – பை’ வசதி வழங்கும் பணியை, ‘ரயில்டெல்’ செய்து வருகிறது.

download (1)

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான், முதன்முறையாக,  பயணிகளுக்கு இலவசமாக ‘வை – பை’ வசதி வழங்கப்பட்டது.  இதனை தொடர்ந்து இரண்டாவது ரயில் நிலையமாக, ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில், இலவச ‘வை – பை’ வசதியும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.  .  ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது இது போன்று நாடு முழுவதும், 400க்கும் அதிகமான ரயில் நிலையங்களில், ‘வை – பை’ வசதி  செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர், பாட்னா, ராஞ்சி, எர்ணாகுளம், அலஹாபாத், லக்னோ மற்றும் , 10க்கும் அதிகமான ரயில் நிலையங்களில், ‘வை – பை’ வசதி வழங்குவதற்கான சோதனை நடந்து வருகிறது.
விரைவில், இந்த ரயில் நிலையங்களில், ‘வை-பை’ வசதி முழுமையாக தொடங்கப்படும். ஏற்கனவே கூறியிருந்த படியே  இந்த ஆண்டு இறுதிக்குள், 100 ரயில் நிலையங்களில், ‘வை – பை’ வசதி செய்து தரும் திட்டமும் விரைவில் அமலாகும் என கூறியுள்ளனர். இது போன்ற இலவச சேவையினால் இணையத்தை இதுவரை அணுகாத மக்களையும் இணையத்திற்குள் கொண்டு வரும் நிலை உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Comments are closed.