663 total views
கொரில்லா வகை கண்ணாடியை வழக்கமாக கணினி பலகைகள் மற்றும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே பயன்படுத்தியிருப்போம். ஆனால் தற்போது ஃபோர்டு தயாரித்து கொண்டிருக்கும் அதன் சூப்பர் கார்களில் கொரில்லா வகை கண்ணாடிகளை அறிமுகபடுத்தி தயாரித்து வருகின்றனர். காரின் தோற்றத்தோடு கொரில்லா வகை கண்ணாடிகள் மிக அழகாக பொருந்தியுள்ளன.இந்தக் கண்ணாடியின் பேனல்கள் காரின் மற்ற பாகங்களை விட இலேசான எடை கொண்டதால் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறனையும் , கண்ணாடியைப் பொறுத்த வரையில் அதிக சேதம் ஆகாதவாரும் செய்யப்பட்டுள்ளது.இதனை ஃபோர்டு, கார்னிங் நிருவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. கார்னிங் இதுவரை ஃபோர்டிற்கு இஞ்சின் கவர்கள் , முகப்பு கண்ணாடிகள் போன்றவற்றை அறிமுகபடுத்தியுள்ளது.
பாரம்பரியமாகவே கண்ணாடியில் இரண்டு அடுக்குகளைக் கொண்ட உள்ளீடுகள் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் . ஃபோர்டு மோட்டார் நிருவனத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் பயன்படுத்தியுள்ள இந்த கொரில்லா வகை கண்ணாடியில் பல்வேறு நன்மைகள் உள்ளன என கருதுகின்றனர். மேலும் ஃபோர்டின் வெளிப்புற மேற்பார்வையாளரான பால் லிண்டன் அவர்கள் 1923 லிருந்து இதுவரை காரின் கண்ணாடிகளில் செய்யப்பட்ட முன்னேற்றத்தில் இது ஒரு புதுவகை கண்டுபிடிப்பு என கூறியுள்ளார்.
இந்த புதிய தொழிநுட்பத்தினை சாலைகளில் மேடு மற்றும் பள்ளங்களில் சோதனை ஓட்டம் பார்க்க உலவ விடப்பட்டுள்ளது.மேலும் விபத்தின் போது கண்ணாடித் துண்டுகள் உடைக்கப்பாட்டால் அவை யாரையும் சேதம் செய்யாமல் இருப்பதையும் சோதனையில் நிரூபித்துள்ளனர்.இந்த அதிநவீன சூப்பர் காரின் விலையினை $400,000 வரை இருக்கலாம் என அறிவித்துள்ளனர். இந்த கொரில்லா வகை கண்ணாடிகள், கார்கள் தயாரிப்பில் ஒரு புரட்சியைக் கொண்டு வருமானால் மற்ற கார் தயாரிப்பு நிருவனங்களும் இந்த நுட்பத்தைக் கடைபிடிக்க சாத்தியமுண்டு.
Comments are closed.