சிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி?

578

 2,956 total views

LCD / TFT  திரை வாங்கும் போது சில விசயங்களை மனதில் கொள்ளவேண்டும்.

1. அளவு
தங்களின் தேவை மற்றும் சந்தை விலையைப் பொறுத்து அளவு மாறுபடும்.

15 – இன்ச்
16 – இன்ச் (சில மாடல்களில் மட்டும்)
17 – இன்ச்
20 – இன்ச்
22 – இன்ச்
ஆகியவை சராசரியான அளவுகள்.

2. விலை:
அளவு கூடக் கூட விலை 2000 முதல் 4000 வரை கூடும்.
22இன்ச் திரை சராசரியாக 10000 ரூபாய் முதல் 11000 ரூபாய் வரை கிடைக்கும்.

ரூபாய் 6500 – 7000ல் ஒரு நல்ல 17 இன்ச் திரையை வாங்கிவிடலாம்.

3. எந்தத் தயாரிப்பு நல்லது?

SAMSUNG :
திரை தயாரிப்பில் மிகவும் அனுபவம் மற்றும் மக்களின் நம்பிக்கை பெரிதும் உள்ள இந்த நிறுவனத்தின் திரைகள் சிறப்பாக உள்ளன.

DELL:
அருமையான தரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த நிறுவனம், மிகச் சிறந்த திரைகளை வெளியிடுகிறது. மக்களின் மிக இன்றியமையாத் தேவையான விற்பனைக்குப் பிந்திய சேவை வழங்குவதில் இந்நிறுவனம் சற்றே பின்தங்கி உள்ளது.

LG, Viewsonic & Acer போன்ற நிறுவனங்கள் நல்ல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி இருந்தாலும், விற்ப்பனை செய்வொரின் ஆதரவு குறைவாகவே உள்ளது.

டெக்தமிழ் பரிந்துரை:
சம்ஸூங் 20 அல்லது 22 இன்ச் திரை வாங்குவது மிகவும் நல்லது.

அல்லது 17இன்ச் டெல், LG வாங்கலாம்.

You might also like

Comments are closed.