இந்தியாவில் ஐபோன் விற்பனை 400% வளர்ச்சி – Tim Cook

491

 1,303 total views

apple-store2

ஆப்பிள் நிறுவனம் தனது மூன்றாவது காலாண்டு நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிதுள்ளது. அது பற்றி பேசிய நிறுவன முதன்மை செயல் அலுவலர் (CEO)  டிம் குக்., வளர்ந்து வரும் புதிய சந்தைகளில் நமது தயாரிப்புகள் நன்றாக விற்பணையாகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஐபோன் விற்பனை 400% அதிகரித்துள்ளது.

ஐபேட் விற்பனையும் குறிப்பிடத் தகுந்த அளவில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

உலக அளவில் விற்பனை வருமானம் $35.3 பில்லியன், இலாபம்  $6.9 பில்லியன்.  கடந்த வருடத்தில் இருந்து ஆப்பிள் தனது பொருட்களை தவணை முறையில் விற்பதை அறிமுகம் செய்தது. இந்தியாவில் பழைய ஐ போனை  மாற்றுவதன் மூலம் ரூபாய் 8000 (Exchange Bonus) வழங்குகிறது.

ஐபோன் : Rs. 26,500 to Rs. 59,500

ஐ பேட் : Rs. 21,900 to Rs. 56,900

நான் ஏன் ரூ. 16000க்கு அதிகமா போன் வாங்குவதில்லை?
கடந்த வருட அக்டோபர் முதல் டிசம்பர் வரையாயான காலாண்டில் மட்டும் சுமார் 2,30,000 ஐபோன் விற்பனை ஆகியிருக்கும் என IDC Data தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளில் “Apple Store” எனும் பெயரில் தானே விற்பனை செய்யும் ஆப்பிள், இந்தியாவில் Redington & Ingram Micro போன்ற மொத்த விற்பனையாளர்கள் மூலம் விற்கிறது.

துருக்கி , பிலிப்பைந்ஸ் மற்றும் போலாந்து போன்ற நாடுகளிலும் விற்பனை சிறப்பாக உள்ளதாக அவர் அறிவித்தார்.

You might also like

Comments are closed.