மாணவர்களுக்கான Lenovo Classmate Laptop

910

 1,697 total views

மாணவர்களுக்கான கல்வியையும் மற்றும் பொழுதுபோக்கையும் தரவேண்டும் என்ற நோக்கில் அவர்களுக்கென்று தனியாக laptop மற்றும் Tablet-களை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை ஏற்கனவே வந்துவிட்டது. மிகவும் பிரபலமான OLPC ஏற்கனவே குழந்தைகளுக்கு மலிவான விலையில் கணினிகளை அறிமுகப்படுத்தியது.

அந்த வரிசையில் இப்போது Lenovo நிறுவனம் மாணவர்களுக்காக multimode வசதி கொண்ட புதிய மலிவு விலை laptop-களை களமிறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற Los Vegas நுகர்வோர் கண்காட்சியில் Lenovo தனது கல்விக்கான கணினியை அறிமுகப்படுத்தியது. அது பலரையும் கவர்ந்தது. அந்த புதிய டிவைசின் பெயர் Classmate + PC ஆகும். இந்த புதிய Laptop பயன்படுத்துவதற்கு மிக எளிதாகவும்,  battery  நீண்ட நேர இயங்கும்  என்றும்  இதன் விலை மிகக் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இந்த classmate laptop பற்றி அதிகமான தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இதனுடைய முக்கிய சிறப்பு அம்சங்கள் கண்காட்சியில் தெரிவிக்கப்பட்டன. அதாவது இந்த classmate laptop-ன் CPU Intel N2600 Atom processor ஆகும்.  10.1 inch  ஆன்டி க்ளேர்தொடு வசதி திரை, இதில் HD வசதியும் உண்டு. 2GB DDR3 RAM, 320 GB Hard disk கொண்டுள்ளது. அதோடு 32ஜிபி கொண்ட ஒரு சாலிட் ஸ்டேட் ட்ரைவும் துணையாக உள்ளது. இதன் மெமரி குறைவாக இருந்தாலும் இதன் எஸ்எஸ்டி ட்ரைவ் வேகமாக இருக்கும். இதன் 6  செல் battery முழுமையாக சார்ஜ் செய்தால் அது 10 மணி நேர இயங்கு நேரத்தை கொடுக்கும்.

இணைப்பு வசதிகளுக்காக இந்த classmate laptop 3 USB ports, HDMI port மற்றும் இதன் கீபோர்டு தண்ணீர் தடுப்பு வசதி கொண்டது. அதனால் இதில் தண்ணீர் பட்டாலும் இது எளிதாக பாதிப்பு அடைவதில்லை. மேலும் இந்த laptop உறுதியான பேன்ல்களுடன் வருவதால் இது நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கிறது. இந்த லெனோவா classmate + PC  விரைவில் கல்வி நிலையங்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Comments are closed.