யாகூவின் டெலிசியஸ் இப்பொழுது யூடூப் நிறுவனர்கள் கையில்

487

 1,137 total views

Yahoo Sells Delicious To YouTube Founders . யாகூவின்(yahoo)  நீண்ட நாள் தேடல் முடிவுக்கு வந்துவிட்டது. இப்பொழுது யூடூப் (youtube) நிருவனர்களான Chad Hurley மற்றும் Steve Chen யாகூவின் டெலிசியஸ் (Delicious) இணையதளத்தை வாங்கி உள்ளது. இது AVOS என்ற இணையதள கம்பெனியின் கீழ் வருகிறது.

Delicious இணையததளமானது இணையத்தை பயன்படுத்துவோரின் பிடித்தமான வலைபக்கங்களின் முகவரியை சேமித்துவைக்க பயன்படும் தளமாகும். இதின் முக்கிய பயன் என்னவெனில். இணையத்தை பயன்படுத்துவோர் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களின் சேமித்த இணைய முகவரிகளை எடுத்துப் பார்க்க முடியும்.

தற்பொழுது Delicious இணையதளம் Youtube நிறுவனர்களிடம் விற்கப்பட்டுள்ளது. இருப்பினும் July 2011 வரை yahoo நிறுவனம் Delicious இணையதளத்தை வழிநடத்தும் என்று தெரிவித்துள்ளது. அதற்குப் பின் Delicious உபயோகப்படுத்துவோரின் விவரங்கள் மற்றும் அவர்களின் தகவல்கள் Delicious ன் புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப் படும்.

இந்த பரிமாற்றம் நடக்கும் கால கட்டத்தில் Delicious உபயோகிப்போர்களிடம், இந்த ஒப்பந்தம் பற்றி விளக்கப் பட்டு ஒப்புதல் வங்கப் படும்.
ஏன் இந்த பரிமாற்றம் :

Yahoo நிறுவனத்தால் Delicious ஐ பெரிய அளவுக்கு திறம்பட நடத்தமுடியவில்லை. எனவே AVOS வசம் Delicious ஒப்படைக்கப்பட்டது.

AVOS என்ன செய்யப் போகிறது :

Delicious இணையதளத்தை இன்னும் புதுமையான வகையில் பயனாளர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றவிருக்கிறது. மேலும் தற்பொழுதுள்ள அணைத்து தகவல்களையும் அவ்வாறே இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளும்.

இந்த வாய்ப்பின் மூலம் Delicious இணையதளம் புதிய பரிணாமத்தை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கலாம். இதை பற்றி மேலும் தெரிந்துகொள்ள Delicious Blog ஐ பார்க்கவும்

You might also like

Comments are closed.