நீாில் நடப்பது போல் உணர வைக்கும் காலணிகள் :

499

 822 total views

அதிதாஸ்  நிறுவனமும் பெர்லே நிறுவனமும்  அதன் காலணிகள் தயாரிப்பில்    சுற்றுசூழலுக்கு  தீங்கிளைக்காத  ஒரு  தயாரிப்பினை  தர  எண்ணி   புதுவகை காலணி  ஒன்றை அறிமுகபடுத்தி உள்ளது. இதனை உற்று நோக்கும்போது அதில் இரு முக்கியமான விஷயங்கள் தென்படுகின்றன. ஒன்று காலணிகள் தயாரிப்பின் முதல் 3-d  பிரிண்டட்   நுட்பமும்  மற்றொன்று கடலோரத்தில் கிடைக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை வைத்து தயாரிக்கும் முதல் காலணியுமாகும்.

409669-325x325

அதிதாஸ் (adidas) நிறுவனம் தற்போது கடல்களில் கிடைக்கும் கழிவுகளிலிருந்து தயாாிக்கப்பட்ட  காலணிகளை உருவாக்கியுள்ளது. இதில்  குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இவையனைத்துமே கடலுக்கு அருகே கிடக்கும்  கடலை மாசுப்படுத்தும் பொருள்களை வைத்து தயாாிக்கப்படுவதுதான்.

அதிதாஸினை பொறுத்த வகையில் இந்த காலணிகள் முழுக்க கடலோரம் இருக்கும் கடலின் தூய்மையை கெடுக்கும் பொருள்களை மறுசுழற்சி செய்து தயாாிக்கப்பட்டது.

அடிடாஸ் இதுபோன்ற புது புது பொருள்களை கொண்டு காலணிகளை தயாாிக்கு முயற்சியை தொடா்ந்து செய்யப் போவதாக அறிவித்துள்ளனா். தற்போது இந்த கடல் கழிவுகளில் கிடைக்கும் பொருள்களை வைத்து தயாாிக்கு காலணியை இந்த வருட இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளனர்.
சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை வைத்து நவீன ஆடை அலங்கார பொருள்களை தயாரிக்கும் அதிதாசின் நுட்பம் வெற்றி பெறின்  பல முன்னணி நிருவனங்களும் இது போன்ற  நுட்பதையே கையாளும் வாய்ப்புமுண்டு. இதனால்  நாட்டில் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் பொருள்கள் அனைத்தையும் நீக்கி பூமியின் சுற்று சூழல் வளத்தினை பேணலாம்.
சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்கும் பொருள்களை அழிக்கும் எண்ணம் அதிதாசுக்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்னே பிளாஸ்டிக் பைகளை அடுத்த வருட இறுதிக்குள் ஒழிக்கும் கொள்கை கொண்டு அவர்களது அலுவலக கலந்துரையாடலின்போதும்  கூட  பிளாஸ்டிக் புட்டிகளை உபயோகிக்காமல் இருந்தது சுற்றுசூழலுக்கு எதிரான பொருள்களை அளிக்கும் அவர்களது மேம்பட்ட எண்ணத்தை  காட்டுவதாகவே  இருந்தது.

You might also like

Comments are closed.