போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்

493

 974 total views

மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் குறுந்தகவல்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்கின்றனர். இதனை குறைக்கும் வகையில் செக்பாயிண்ட் டிப்லைன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.இந்திய தேர்தல் காலத்தில் வாட்ஸ்அப் செயலியில் பரவும் போலி செய்திகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்கின் துணை  நிறுவனமான வாட்ஸ்அப் தனது செயலியில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, புதிய வசதிகளை சேர்க்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

செக்பாயிண்ட் டிப்லைன் எவ்வாறு இயங்கும்?

பொது மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களை வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் எண்ணில் (+91-9643000888) அனுப்பலாம்.இந்த டிப்லைனில் பயனர் ஒரு குறுந்தகவலை பகிர்ந்து கொள்ளும் போது, இந்தியாவை சார்ந்த ப்ரோடோவின் ஆய்வு மையம் சம்மந்தப்பட்ட குறுந்தகவல் உறுதி செய்யப்பட்டதா இல்லையா என்பதை தெரிவிக்கும்.பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு ப்ரோடோ மூலம் அனுப்பப்படும் பதிலில் சம்மந்தப்பட்ட குறுந்தகவல் உண்மை, பொய், தவறானது, பிரச்சினைக்குரியது போன்றவை இடம்பெற்றிருக்கும். செக்பாயிண்ட் டிப்லைனில் ஆங்கிலம் தவிர இந்தி, தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளை சப்போர்ட் செய்கிறது.

சில மாதங்களுக்கு முன்னால் வாட்ஸ் அப்பில் பரவிய வதந்திகளால் கூட்டு வன்முறைகள் இந்தியா முழுவதும் பரவலாக நடந்தன. இதுபோன்ற சம்பவங்களில் நூற்றுக்கும் மேலானோர் பலியாகினர்.

இதையடுத்து வாட்ஸ் அப்பில் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நடவடிக்கைகளை எடுக்க இந்தியப் பிரிவுக்கான தலைவரை நியமிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தியது. இந்திய அரசின் கோரிக்கையை ஏற்ற வாட்ஸ் அப் நிறுவனம், இந்தியப் பிரிவின் தலைவராக அபிஜித்போஸ் என்பவரை நியமித்தது.

அதேபோல போலி செய்திகள் பரவுவதைத் தடுக்கும் வகையில்  ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்ய முடிகிற வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் கட்டுப்பாடு விதித்தது.

அரசியல் கட்சிகள் வாட்ஸ் அப்பைத் தவறான முறையில் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம், இது தொடர்ந்தால் அவர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்படும்  என எச்சரித்துள்ளது.

You might also like

Comments are closed.