தென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்

322
வாடகை வண்டி பதிவு சேவை நிறுவனமான உபர் (Uber)  மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் உள்ள தனது வணிக பிரிவை , இதன் போட்டி நிறுவனமான கிராப் (Grab) நிறுவனத்திடம் விற்று விட்டது.  தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த இரண்டு நிறுவனங்களும் போட்டி போட்டுகொண்டு விலை குறைப்பை செய்து வந்தன. இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் வாடகை வண்டி கிடைத்தது , வண்டி ஓட்டுனர்களின் வருமான இழப்பை நிறுவனங்கள் ஈடுகட்டி வந்தன.  இப்படியே சென்றால் இரண்டு நிறுவனங்களும் நட்டத்தை தான் சந்திக்கும் என்ற நிலை வந்தது. உடனே இரு நிறுவனங்களும் விற்பனை மற்றும் பங்கீடு முறையில் இணைந்துள்ளன.  ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உபர் நிறுவனத்தை வாங்கிக் கொண்ட கிராப் தனது நிறுவனத்தின் 27.5 சதவீத பங்குகளை உபர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இதுவரை 3 நாடுகளில் மட்டுமே செயல்பட்டுவதா கிராப் இனி 8 தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இயங்கும்.
இது போல போட்டி நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்குவது அந்த துறையில் போட்டியே இல்லாமல் தான்தோன்றி தனமாக விலையேற்றம் நடக்க வாய்ப்புள்ளது. இது போன்ற போட்டி நிறுவன கையக படுத்தல் விவகாரங்களை விசாரிக்கும் வாரியம் ஒன்று சிங்கப்பூர் அரசு வைத்துள்ளது. இந்த வாரியம் இனி இந்த துறையில் ஒரே ஒரு பெரு நிறுவனம் இருந்தால் அது வாடகை கட்டணம், ஓட்டுனர்களுக்கு சரியான வருமானம் போன்றவை மக்களுக்கும் ஓட்டுனர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா என விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அனுமதி தரும்.

You might also like

Comments are closed.