டிரம்ப் அதிபரான பின் இந்திய IT நிறுவனங்களின் லாபியிங் செலவு 40% அதிகரித்துள்ளது
802 total views
அமெரிக்காவின் அதிபராக 2017 ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதிவியேற்ற பின்னர் லாபியிங் (Lobbying) செலவு செய்வதில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக CLSA எனும் முதலீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
லாபியிங் என்றால் என்ன?
அமெரிக்க அரசு கொள்கை முடிவுகள், சட்டங்கள் இயற்றும் போது அது தங்களின் நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கவேண்டும் என ஒரு நிறுவனமோ அல்லது பல நிறுவனங்களோ நினைத்தால், பாராளுமன்ற உறுப்பினர், அமைச்சர், அரசு அதிகாரிகளுக்கு சட்டப்படி நன்கொடை, வளர்ச்சி நிதி எனும் பெயரில் பணம் அல்லது பண மதிப்பில் வீடு, கப்பல் என வேறு வடிவத்திலும் கொடுக்கலாம். கொடுத்துவிட்டு இன்னாருக்கு இவ்வளவு பணம் கொடுத்தோம் என நிறுவனத்தின் வருமான வரி கணக்கில் தெரிவித்துக்கொள்ளலாம். இந்தியாவில் இதன் பெயர் லஞ்சம் , கமிஷன் என சட்டத்திற்கு புறம்பாக கருதப்படுகிறது. அமேரிக்கா முழுவதும் எந்தெந்த முக்கிய நபருடன் அதிக பழக்கம் உள்ளது என வைத்து தொழில்முறை லாபியிஸ்ட் எனும் பெயரில் பலர் உலவுகிறார்கள். இந்தியாவில் இவர்களை “அரசியல் புரோக்கர்” என நாம் அழைக்கிறோம் (நீரா ராடியா, சுப்ரமணிய சாமி).
இந்திய நிறுவனங்கள் ஏன் அமெரிக்காவில் லாபியிங் செய்கின்றன?
டிரம்ப் அரசு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேறுவதற்கு எதிராக பல கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. H-1B விசா வழங்கும் எண்ணிக்கையை குறைப்பது, வெளிநாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பணிகள் வழங்கினால், கூடுதல் வரி விதிப்பது என பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களே அதிகமாக நேரடியாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அமெரிக்காவில் உள்ள அரசியல் ப்ரோக்கர்களை அணுகி ட்ரம்ப் கட்சி தலைவர்களுடன் நட்பு பேண முயற்சித்துவருகின்றன.
TCS , விப்ரோ , கஃனிசன்ட் & இன்போசிஸ் ஆகிய நிறுவனங்கள் லாபியிங் செய்ய செலவிட்ட பணத்தின் அளவு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
2015 – $2.4 மில்லியன் டாலர் 2016 – $2.9 மில்லியன் டாலர் 2017 – $3.3 மில்லியன் டாலர் 2018 (முதல் 9 மாதங்கள்) – $3.2 மில்லியன் டாலர்
TCS $80,000 வருடத்திற்கு செலவிட்ட தொகை நான்கு மடங்கு அதிகரித்து $380,000 ஆகியுள்ளது.
உள்நாட்டு பாதுகாப்பு துறை (DHS), விசா வழங்கும் USCIS ஆகியவை வெளிநாட்டு திறமையாளர்கள் அமெரிக்காவில் குடியேறுவதை தவிர்க்கும் விதிமுறைகளை அமல்படுத்த வேகமாக முயற்சித்து வருகின்றன. இதனால் வெளிநாட்டு (இந்திய) நிறுவனங்கள் அமெரிக்காவில் உள்ள அலுவலகங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு வேலை வழங்க வேண்டும், இந்தியாவில் இருந்து இந்தியர்களை அமெரிக்காவிற்கு அனுப்பு அவர்களை அமெரிக்க குடிமக்களாக மாற்றும் நடவடிக்கைகளை தடுக்கப்படும்.
ஏற்கனவே இப்படி அமெரிக்க குடிமகனாக ஆன ஒரு நபரின் இந்திய மனைவி/கணவர் அமெரிக்காவில் பணி செய்வதை தடுக்கும் சட்ட திருத்தம் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பின்னர் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Comments are closed.