SOPAக்கு எதிர்ப்பு தெரிவித்து Wikipedia அதிரடி முடிவு
1,053 total views
சமூக தளங்களை பார்த்து இப்பொழுது உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கலங்கி போய் உள்ளன. ஏற்க்கனவே இந்த சமூக தளங்களை சீனா உட்பட பல நாடுகள் தடை செய்துள்ளது. இந்த வரிசையில் அமெரிக்க அரசாங்கமும் குறிப்பிட்ட சில இணையதளங்களை தடை செய்யும் SOPA (Stop Online Piracy Act) என்ற புதிய சட்டத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு அமெரிக்க மக்கள் மட்டுமின்றி பிரபல இணைய நிறுவனங்களான Facebook, Google, Twitter, LinkedIn, wikipedia போன்ற அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இப்பொழுது அடுத்த கட்டமாக SOPA சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து Wikipedia நிறுவனம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது 17.01.2012 புதன் கிழமை Wikipedia தளம் செயல்படாது என Wikipedia உரிமையாளர் ஜிம்மி வேல்ஸ் தனது Twitter-ல் பகிர்ந்துள்ளார்.
ஏற்கனவே இந்த போராட்டத்தில் Reddit தளமும் 12 மணி நேரத்திற்கு முடக்கப்படும் என அந்த தளம் அறிவித்து உள்ளது. இப்பொழுது அந்த போராட்டத்தில் Wikipedia தளமும் பங்கு கொண்டுள்ளது. Wikipedia தளம் 300 மொழிகளுக்கு மேல் சேவையை வழங்கினாலும் ஆங்கில பதிப்பு தான் உலகளவில் அதிகம் பேரால் பார்க்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஏதேனும் முக்கிய தகவலை Wikipedia-வில் அறிய வேண்டுமென்றால் இன்றே பார்த்துக் கொள்ளுங்கள். 17.01.2012 இந்த தளம் வேலை செய்யாது.
Comments are closed.