பெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர் குறைவாக Oracle சம்பளம் வழங்கியுள்ளது.

268

அமெரிக்காவில் உள்ள ஆரக்கிள் Oracle நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மத்தியில் அவர்களின் இன அடிப்படையில் சம்பளத்தில் வித்தியாசம் காட்டி குறைவாக வழங்கப்படுகிறது என அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது .

குறிப்பாக அனைத்து இன பெண்கள், கருப்பர்கள், ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள், தென் அமெரிக்க லத்தின் இன ஊழியர்களுக்கு  ஒரே பணியில் இருந்தாலும் வெள்ளை இன ஆண்களுக்கு வழங்கும் சம்பளத்தை விட குறைவாகவே வழங்கப்படுகிறது எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் ஆசிய நாடுகளில் இருந்து கல்லூரி மாணவர்களை , கல்வி விசாவில் அமேரிக்கா வரவைத்து அவர்களையும் முறையான பணியாளர்களாக காட்டாமல் மிக குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கி வந்ததாகவும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் $400 மில்லியன் டாலர் வரை குறைவான சம்பளம் இந்த வகை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க தொழிலாளர் நல துறை தெரிவிக்கிறது.

ஆரக்கிள் போல கூகள் நிறுவனமும் இவ்வாறு ஊழியர்களின் இன அடிப்படையில் பாகுபாடு காட்டி குறைவான சம்பளம் வழங்கியதாக, இரண்டு வருடங்களுக்கு முன் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.

You might also like

Comments are closed.