இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் 3வது பெரிய செயலி ஒபேரா மினி!

188

அலைபேசிகளுக்காண  இணைய உலாவியான ஒபேரா  மினி (Opera Mini)  மிக வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. மார்ச்  2012 இல் 168 மில்லியன் பயனாளர்களை  கொண்டு  இருந்த இந்த நிறுவனம், பிப்ரவரி  2013 இல் 150  மில்லியன் பயனாளர்களை கூடுதலாக பெற்று 300 மில்லியனை தாண்டியது.

 

சமீபத்தில் இந்தியாவில் பயனாளிகள் எண்ணிக்கையில் வாட்ஸ் அப் செயலி(App) 70 மில்லியன் எனும் மைல்கல்லை எட்டியது. இப்போது  அலைபேசி  இணைய உலாவியான (பிரவுசர்) ஓபரா மினி இந்தியாவில் 50 மில்லியன் பயனாளிகள் எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்த மைல்கல் தொடர்பான செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ள ஓபரா, இந்தியாவில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் செயலிகளுக்கு அடுத்த இடத்தில் தனது உலாவி இருப்பதாகவும் கூறியுள்ளது. அதோடு உலக அளவில் இந்தியாவில்தான் ஓபரா மினி பயனாளிகள் அதிகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்க்கு  அடுத்து அதிகபடியான முகநூல் பயனாளர்கள்  இருப்பது  இந்தியாவில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இணைய பக்கத்தை 90 சதவீதம் சுருக்கித் தருவது (இதனால் மொபைல் டேட்டா செலவு குறையும்) உட்பட பல்வேறு சிறப்பம்சங்கள் பிரவுசரில் இருப்பதாக ஓபரா தெரிவிக்கிறது.  இன்று ஸ்மாட் போன்கள், APPகள், மற்றும் புதிய மின் சாதனங்கள், அனைத்தும் இந்தியாவின் சந்தையை பிடிப்பதே தங்கள் நீண்ட கால வணிகத்திற்க்கு உகந்தது  என செயல்படத்  துவங்கி  இருக்கிறார்கள்.

 

ஒபேரா மினி இந்தி, தெலுங்கு, தமிழ், பெங்காலி, மராத்தி, உருது, காஸ்மீரி  உள்ளிட்ட இந்திய  மொழிகளில் கிடைப்பது இதன் சிறப்பம்சமாகும். மேலும் இந்தியாவில் விற்பனை செய்யும் 16 நிறுவனங்களின் கைபேசிகளில் ஒபெரா மினி ஏற்கனவே பதியப் பட்டே விற்பனை செய்யப்படுகிறது.​ 350 வகை ஆண்ட்ரைடு கைபேசிகளில் ஒபெரா மினி வேலை செய்யும்.

 

இந்த புதிய மைல்கல்லை அடைந்த மகிழ்ச்சியில் ஒரு பெரிய Shopping Mallஇல் மகிழ்ச்சியாக ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சியை Opera India தலைவர் நடத்தினார்.

 

 

You might also like

Comments are closed.