எம்ஸ்விப் மூன்று கோடி முதலீடு : பாயின்ட் ஆப் சேல் (Point of Sale) டெர்மினல்களுக்கு

608

 1,286 total views

மத்திய அரசு ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து ஸ்வைப் மெஷின் வழங்கும் நிறுவனமான

இந்தியாவின் எம்ஸ்விப் தற்போது தங்கள் பாயிண்ட் ஆப்  சேல்ஸ் டெர்மினல்களை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.தற்போது நான்கு லட்சம் வர்த்தகர்களை கொண்ட எம்ஸ்விப் 2019 நிதியாண்டில் 15 லட்சம் வர்த்தகர்களை சென்றடைய திட்டமிட்டுள்ளது. அதற்காக  தங்கள் முதலீடர்கள் Falcon Edge, B Capital, Epiq Capital மற்றும் DSG Growth Partners இருந்து சுமார் 207 கோடியை நிதியை கோரியுள்ளது.

இத்துடன் இரண்டு புதிய சேவையாக ஸ்மார்ட் பிஓஎஸ் மற்றும் UPI QR குறியீடுகள் தொடங்கவுள்ளது  QR CODE என்பது Bar Code-ஐ போல உள்ள ஒரு Matrix barcode (or two-dimensional barcode) ஆகும். Quick Response Code என்பதன் சுருக்கமே QR CODE ஆகும். அதாவது விரைவாக தகவல்களை பெறக்கூடிய குறியீடு  என்பதாகும். மேலும் இதற்காக 3 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் பத்து லட்சம் வர்த்தகர்கள் மீது நன்கு பணியாற்றுவோம் என எதிர்பார்க்கிறோம் என தலைமை நிர்வாக  அதிகாரி மனிஷ் படேல் கூறினார்.மேலும் இது போன்ற நிறுவனங்கள் அதிகரித்து கொண்டதே இருப்பதால் Mswipe நிறுவனம் தனது போட்டி நிறுவனங்களை விட  மலிவாக தனது சேவையை தருகிறது மேலும் 2ஜி இணைய இணைப்புகளை தனது வடிக்கையாளர்க்கு தொடர்புகொள்ள முடியாத பகுதிகளிலும் கூட குறைந்த செலவில் மிக  சுலபமாக கொண்டுசேர்க்கிறது.

You might also like

Comments are closed.