60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக வெளியிட்டது மைக்ரோசாப்ட்

794

 530 total views

அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் புதிதாக தாங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சிறப்பம்சத்திற்கும் பேடண்ட் (Patent) எனப்படும் காப்புரிமையை பதிவு செய்வார்கள். இவற்றை பிற நிறுவனங்கள் பயன்படுத்தினால் அதற்காக குறிப்பிட்ட வெகுமதி தொகையை கண்டுபிடித்த நிறுவனத்திற்கு ராயல்டியாக கொடுக்க வேண்டும்.  மென்பொருள் நிறுவனங்களின் இந்த கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் விதத்தில் Intellectual Property Rights என அறிவு சார் சொத்து காப்புரிமை எனும் பெயரில் சட்ட திட்டங்கள் உள்ளன. 

மென்பொருளின் மூல நிரல் (SourceCode) பொது வெளியில் யார் வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்தி, மேம்படுத்தி வெளியிடலாம் எனும் கருத்தியல் OpenSource என்றழைக்கப்படுகிறது.  பல தன்னார்வ மென்பொறியாளர்கள் பல குழுக்களில் இயங்கி வருகிறார்கள்  Mozilla, Linux, Apache , PHP என எண்ணற்ற OpenSource மென்பொருள் குழுமங்கள் உள்ளன. மென்பொருள் மற்றும் வன்பொருள் மற்றும் அனைத்துவகை கண்டுபிடிப்புகளையும் திறந்த நிலையில் பொது பயன்பாட்டிற்காக திறந்த நிலையில் வெளியிடும் அமைப்பாக Open Invention Network எனும் குழுமம் இயங்கி வருகிறது.  

IBM , Google உள்ளிட்ட 2400 நிறுவனங்கள் இந்த OIN குழுமத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். சமீபத்தில் MicroSoft நிறுவனம் தங்களுக்கும் OpenSource மென்பொருள் உருவாக்கத்தில் ஈடுபாடு உள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையில் பல மென்பொருள் மூல நிரல்களை திறந்தவெளியில் வெளியிட்டு வருகிறது. தங்கள் நிறுவனத்தில் புதியதாக கண்டுபிடித்து காப்புரிமை பெறப்பட்ட 60000 கண்டுபிடிப்புகளை OIN குழுமத்தில் உள்ள எவரும் திறந்தநிலையில் பயன்படுத்தலாம் என வெளியிட்டுள்ளது. 
பொதுவாக OpenSource க்கு எதிர்நிலையில் இருக்கும் MicroSoft கடந்த சில வருடங்களாக தனது நிலைப்பாட்டை மாற்றி வருவது, பல மென் பொறியாளர்கள் மத்தியில் MicroSoft மீதான வெறுப்புணர்வை குறைய செய்துள்ளது.   

You might also like

Comments are closed.