செயற்கை அறிவாற்றல் மூலம் கல்வி கற்பிக்கும் ஐ.ஐ.எஸ்.சி (IISC) கல்வி நிறுவனம்

562

 1,361 total views

“கல்வியில் இன்று கற்றல் திறன் என்பது பல்வேறு வகைகளில் மேன்மைப்படுத்தப் பட்டுள்ளன. மணலில் எழுதிப் பழகிய காலம் சென்றுவிட்டது. இன்று தொடுதிரையில் எழுதிப் பழகும் அளவில் கற்றல் திறன் வளர்ந்துள்ளது.” இதற்கு  சான்றாக ,

இந்திய கல்வி நிறுவனம் ஐ.ஐ.எஸ்.சி(IISC) இந்த ஆண்டு  செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) மூலம் ம் .டெக்(M.Tech) கல்வியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் திறமையான AIஇல்  ஆற்றல் மிக்க நபரின் தேவை அதிகரித்துவரும் நிலையில் இந்த முயற்சி

அதனை பூர்த்தி செய்யும் என கருதப்படுகிறது .

IISC, AI இன் உலகளாவிய தலைவர்களாக ஆகக்கூடிய பட்டதாரிகளை நிறுவனம் உருவாக்க விரும்புகிறது

M.TECH (AI), Electrical Engineering மற்றும் Computer Science  (EECS) பிரிவில் IISC வழங்குகிறது. பிரிவின் தலைவரான பேராசிரியர் எ.நாரஹரின்  அதிகார பூர்வ அறிவிப்பின் படி புதிய பாடத்திட்டத்திற்கு 40 இடங்களை ஒதுக்கியுள்ளது ,மேலும்  ஜூலை 2019 ல் இருந்து மாணவ சேர்க்கையை தொடங்கவுள்ளது.

computer science, electronics, communication மற்றும் electrical engineering ஆகியவற்றிலிருந்து வரும் மாணவர்களை சேர்ப்பதில்ஆர்வம் காட்டுகிறது.

பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் பாடங்கள் பின்வருமாறு:

– Data structures மற்றும் Algorithms

– Computational Linear Algebra

– Pattern recognition மற்றும் Neural networks

– Game theory

– Deep Learning

– Practical Data Science

– Machine Learning with Large Data sets

– Natural Language Understanding

CS,EC, அல்லது EE ஆவணங்களில் செல்லுபடியாகும் கேட்(GATE) மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை பெறப்படும். தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு ஒரு நேர்காணல் சுற்று நடத்தப்படும்.எழுத்துதேர்வு பொறியியல் மற்றும் கணிதத்தின் அடிப்படையில்   இருக்கும்.

பேட்டியின் சுற்றுக்கு அழைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை, நிறுவனத்தின் உண்மையான உட்கட்டமைப்பு திறனை விட 10 மடங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எழுத்துதேர்வு ஏப்ரல் 15, 2019 அன்று நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு IISc இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை நீங்கள் பார்க்கலாம்.

You might also like

Comments are closed.