வருகிறான் வாட்சன், உலகின் முழு முதல் செயற்கை நுண்ணறிவு எந்திரம்.

1,367

 2,710 total views

நாம் பல தரப்பட்ட செயற்கை நுண்ணறிவு ஏந்திரங்களை (ரோபோ) திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். சில ரோபோ செயல்பாடுகளை ஜப்பான் , சீன நாட்டு வல்லுநர்கள் செய்து காட்டுவதை செய்திகளில் பார்த்திருக்கிறோம். ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவு ரோபோ IBM நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 வருடங்களாக உழைத்து உருவாக்கப்பட்ட இந்த ரொபோவிர்கு வாட்சன் என்று பெயரிட்டுள்ளார்கள். வாட்சன் என்பவர் 1924’இல் IBM நிறுவனத்திற்கு உயிர் கொடுத்தவர். அவரின் நினைவாக இந்த அமைப்பு (System) அமைக்கப்பட்டுள்ளது.

வாட்சன் என்றால் என்ன?

எளிதில் புரியுமாறு சொல்ல வேண்டும் என்றால்.  ஒரு கணினி அதனிடம் நீங்கள் கேட்கும் எந்த ஒரு அறிவியல், கலை, வரலாறு, கணிதம், விண்வெளி, கதை, கவிதை, இலக்கியம் என எதைப் பற்றி கேள்வி கேட்டாலும் விரைவாக மற்றும் துளியமாக பதில் சொல்லும்.

உங்கள் கேள்விகளை TYPE செய்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை உங்களின் VOICE எந்த மாதிரியான உச்சரிப்பாக இருந்தாலும் அதை கவனித்து தன்னிடம் உள்ள தகவல்களில் இருந்து உங்களின் கேள்விக்கான பதிலை இது தரும்.

நான் மேற்சொன்ன தகவல் கேட்க எளிதாக இருக்கும்., இதோ இந்த கேள்வியைப் பாருங்கள்.,

“இவரின் நாடகங்களில் காதல் தோல்வி தான் கதை கருவாக இருக்கும், இவரின் மனைவியின் பிறந்த நாள் என்ன?”

இப்படி ஒரு கேள்வி கேட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்?


முதலில் காதல் தோல்வி பற்றி நாடகங்கள் எழுதிய அனைத்து ஆசிரியர்களின் பெயர் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும். பின்பு அதில் எவருடையது அதிக எண்ணிக்கை கொண்டது., அவருக்கு மனைவி இருந்திருக்கிறாரா? பின்னர் அவரின் பிறந்த நாளை சொல்ல வேண்டும்….

என்ன தலை சுற்றுகிறதா? இதை தான் IBM சாதித்து., உலகை ரோபோ உலகிற்கு நம்மை அழைக்கிறது.

வாட்சன் தன்னுள் பதிந்து வைக்கப்பட்டுள்ள கோடிக் கணக்கான தகவல்கள் (10 WikiPedia) அளவில் இருக்கும் இதுவரை உலகில் பதியப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேர்ந்த பதிவில் இருந்து யோசித்து (உண்மையில் அதன் நிரல் சிறிது யோசிக்கிறது) மனிதனை விட விரைவில் பதில் சொல்கிறது.

இது போன்ற கடினமான கேள்விகளை கொண்ட குவிஸ்ஸ் நிகழ்ச்சி ஜேபாரோடி எனும் நிகழ்ச்சியில் வாட்சன் கலந்து கொண்டு 2 மனித போட்டியாளர்களை வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே IBM அறிமுகப்படுத்திய Deep Blue எனப்படும் சதுரங்கம் ஆடும் கணினி ரசியாவின் க்யாஸ்பெரொவ் என்ற சதுரங்க ஜாம்பவனால்  தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் வாட்சன், அனைவரும் அதிசயிக்கத்தக்க வகையில் உள்ளது.  இன்னும் 100 வருடங்களில் iRobo போன்ற சிந்திக்கும் திறன் பெற்ற ரோபோ வரும் என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.

நான் வட்சனிடம் கேட்பது ஒன்றே ஒன்று தான், “உலகின் அனைத்து கணினி மொழிகளையும் கொண்டு உன்னை விட 1000 மடங்கு சிறந்த ரோபோவ நீயே உருவாக்கு”

You might also like

Comments are closed.